text
stringlengths 1
17.4k
|
---|
விண்வெளி படிப்பில் ஆர்வமுண்டா? ஐஎஸ்ஆர்ஓ கல்லூரி அழைக்கிறது |
ஆராய்ந்து அறியமுடியாத எண்ணற்ற கோள்களையும், ஆர்வமூட்டும் பல்வேறு மர்மங்களையும் உள்ளடக்கியது விண்வெளி. சூரிய குடும்பத்திற்குள் மட்டுமே விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி இன்று எல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாள் தோறும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு, அதன் உட்கூறுகள், மனிதன் வாழத்தகுந்த இடமா? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அனைத்து நாடுகளும் விண் வெளி ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன. அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன.இந்தியாவை பொறுத்தவரை விண்வெளி படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள் நாடு கடந்து படிக்க வேண்டிய கட்டாயம் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் கல்வித்துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக நம்நாட்டிலேயே இப்படிப்பை படிக்கும் வசதி வந்து விட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய (ஐஎஸ்ஆர்ஓ) தொழில்நுட்ப கல்லூரிதான் இந்த வாய்ப்பை வழங்குகிறது.B.Tech in Aerospace Engineering, B.Tech in Avionics and Physical Sciences ஆகிய படிப்புகள் இந்த கல்லூரியில் நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி , பிளஸ்2வில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை கொண்ட பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இப்படிப்புகளில் சேரலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 1.10.1986 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வருடம் சலுகை உண்டு.IIST Admission Test (ISAT2011) என்ற நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். அகமதாபாத், பெங்களூர், புவனேஷ்வர், போபால், கோழிக்கோடு, சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, திஸ்பூர், ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கொல் கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, போர்ட்பிளேர், ராஞ்சி, திருவனந்தபுரம், வாரணாசி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நுழைவுத்தேர்வு வரும் ஏப்.16ல் நடைபெற உள்ளது. இத்தேர்வு மையங்களில் ஏதேனும் மூன்றை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மாணவர் சேர்க்கையில் அரசு விதிமுறைப்படி இடஒதுக்கீடு உண்டு. www.iist.ac.in/isat2011 என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஞீ300ம் செலுத்த வேண்டும். வரும் ஜன.5க்குள் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் வங்கி சலான் எடுத்து செலுத்த வேண்டும். சலான் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்திய பின் சலானுடன் இணைக்கப்பட்டுள்ள The Chairman, ISAT2011, Indian Institute of Space Science and Technology, Valiamala (P.O), Thiruvananthapuram695547 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். |
தப்பிய கைதி கோர்ட்டில் சரண் : 3 ஏட்டுகள் சஸ்பெண்ட் |
கிருஷ்ணகிரி காந்தி ரோட்டை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு வயது பெண் குழந்தையுடன் பெங்களூருக்கு கடத்திச் சென்றதாக கணபதி நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஏட்டுகள் சரவணன், சுரேஷ்குமார், பெரியசாமி ஆகியோர் விஜயகுமாரை ஒசூர் கிளை சிறையில் அடைக்க பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு, விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோர்ட்டில் விஜயகுமார் நேற்று சரணடைந்தார். இதையடுத்து கைதியை தப்பவிட்ட ஏட்டுகள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. பாபு உத்தரவிட்டுள்ளார். |
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்சேர 50 சதவீத மதிப்பெண் போதும் |
தமிழகத்தில் நடை பெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 1200க்கு 1100க்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் முதல்ல தேர்ந்தெடுப்பது மருத்துவ படிப்பைதான். சம்பாதிக் கலாம் என்பதோடு சேவையாற்றும் வாய்ப்பும் இருப்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. மதிப்பெண் தரவரிசையில் முன்னிலையில் இருப்பவர்கள் டாக்டர் சீட்டை தக்கவைத்துக்கொள்கின்றனர். மற்றவர்கள் பிற படிப்புகளுக்கு செல்கின்றனர்.ஆனால் தமிழகத்திற்குள் முடங்கும் மாணவர்களுக்குத்தான் இந்த நிலைமை. பிளஸ் 2 தேர் வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் மருத்துவம் படிக்க முடியும். மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகள், மாநகராட்சிகள், நகராட்சி நிர்வாகங் கள் நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர 15 சதவீத மெரிட் இடங்கள் உள்ளன.இதற்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படு கிறது. முதல்நிலை நுழைவுத்தேர்வு வரும் 2011 ஏப்.3ம் தேதியும், இறுதி நுழைவுத்தேர்வு மே.15ம் தேதியும் நடத்தப்படுகிறது. தேர்வில் கொள்குறி வகையில் வினாக்கள் இடம்பெறும். இப்படிப்புகளில் முத லாம் ஆண்டு சேரும் போது 17 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உச்ச வயது வரம் பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 40 சதவீதமும், மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினர் 45 சதவீதமும், மாற்றுத்திறனாளி எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. 2011ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் வரும் 31வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன்னதாக s700க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயரில் டில்லி யில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டிடி எடுக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப் பித்த பின் அதனை நகல் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து ஜன.7க்குள் அனுப்ப வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டை தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட கனரா வங்கிகளில் டிச.13 முதல் 31ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட பெயரில் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.450ம் டிடியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணத்துடன் ரூ.50 கூடுதலாக செலுத்தி தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம். 'Request for Information Bulletin and Application form for AIPMT 2011' என கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டு டிடி மற்றும் 12க்கு 10 அளவுள்ள சுயமுகவரியிட்ட கடிதம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் கோரும் கடிதம், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 'Deputy Secretary (AIPMT), Central Board of Secondary Education, Shiksha Kendra, No.2, Community Centre, Preet Vihar, Delhi110301 என்ற முகவரிக்கு அனுப்ப வேண் டும். தபால் மூலம் விண்ணப்பம் பெற டிச.24 கடைசி தேதியாகும். |
அலகாபாத் ஐ.ஐ.ஐ.டி.யில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர் படிப்புகள் |
இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், இன்ஜினியரிங் உள்பட அனைத்து துறைகளிலும் அடிப்படை வேலைவாய்ப்புகளை பெற இளங்கலை பட்டம் சாதாரணமாகி விட்டது. முதுநிலை பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பை தட்டிச்சென்று விடுகின்றனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இதுபோன்ற முதுகலை படிப்புகளை அலகாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனம் வழங்குகிறது. MBA in Information Technology படிப்பில் 76 இடங்கள் உள்ளன. இதில் எஸ்சி-11, எஸ்டி-6, ஓபிசி-21, பொது-38 என பிரிவு வாரியாக இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் சிகிஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.MS Cyber Law & Information Security 76 காலியிடங்கள் உள்ளன. இதில் எஸ்சி-11, எஸ்டி-6, ஓபிசி-21, பொது-38 என பிரிவு வாரியாக இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிஇ, பிடெக், பிஎல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.இப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும். எம்பிஏ படிப்புக்கு ஏப்.23, 24 தேதிகளிலும், எம்எஸ் படிப்புக்கு பிப்.26, 27 தேதிகளிலும் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் இடம், தேர்வு மையம் போன்ற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணமாக s1200 (எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு s600) செலுத்த வேண்டும். ' 'IIIT Allahabad'' என்ற பெயரில் அலகாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண்டும்.www.iiita.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் டிடி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 'The Professor in Charge (Exam cell), Indian Institute of Information Technology, Deoghat Jhalwa, Allahabad 211012 (UP)' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். எம்எஸ் படிப்புக்கு வரும் ஜன.21, எம்பிஏ படிப்புக்கு வரும் மார்ச்.24 விண்ணப்பிக்க கடைசி தேதிகளாகும். |
உயிரி தொழில்நுட்பத்தில் வேலை உறுதி |
பொறியியல் துறைக்கு மாற்றாக தற்போது வேகமாக வளர்ந்து வருவது உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி). உயிரி தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுத்துறையில் மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி புரள்கிறது. புதிய மருந்து கண்டுபிடிப்புகள், வேளாண் சார் ஆய்வுகளில் உயிரி தொழில்நுட்பத்தின் தேவை அதிகம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 300க்கும் குறைவான நிறுவனங்களே உயிரி தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைத்திருந்தன. தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. உயிரி வேளாண்மை, உயிரி மருத்துவம், உயிரி தகவலியல் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.இதற்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி உயிரி தொழில்நுட்பத்தில் சிறப்பாக வெற்றி பெற்றால் போதும். ஆண்டுக்கு ஜீ3 லட்சம் சம்பளம் உத்தரவாதம். தமிழகத்தில் அரசு கல்லூரிகள் உட்பட பல்வேறு தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி உயிரி தொழில்நுட்ப படிப்பு வழங்கப்படுகிறது. சில கல்லூரிகளில் முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொறியியல் படிப்பில் உயிரி தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் சார்ந்த ஆய்வுகளுக்கு பொறியியல் பட்டப்படிப்புகள் பலன் அளிக்கின்றன. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலை., கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேலூர் விஐடி பல்கலை. உள்ளிட்ட பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் பொறியியல் சார் உயிரி தொழில்நுட்பம் கற்பிக்கப்படுகிறது.வேளாண் சார் உயிரி தொழில்நுட்பத்துக்கும் மவுசு அதிகரித்து வருகிறது. வேளாண் பல்கலை.யிலும் உயிரி தொழில்நுட்ப 4 ஆண்டு பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மொத்தம் 8 செமஸ்டர்கள் கொண்ட பி.டெக் உயிரி தொழில்நுட்ப படிப்பில் சேர அடிப்படை தகுதி பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவு அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் சேரலாம். |
‘கால் தேர்ந்த’நடன கலைஞர் ஆகுங்கள் |
நடனம் படித்து என்ன பயன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நடனம் கற்பது பொழுதுபோக்குடன் சம்பாத்தியத்துக்கும் வழிவகுக்கும். ஃபாரின் மாப்பிள்ளையை கை பிடித்தால்கூட, நடனம் கற்ற பெண்கள் அங்கேயே நம்மூர் நடனக்கலையை ஒரு தொழிலாக நடத்தலாம். வீட்டில் இருந்தபடியே கைநிறைய சம்பாதிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விமர்சகராக மாறுவதற்கும் முறையாக நடனக்கலை பயின்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தனியாக நடன கல்வி நிறுவனங்களை கூட நடத்தமுடியும். தொலைக்காட்சிகளில் நடனம் தொடர்புடைய கேம்ஷோக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதில் வெற்றி பெற்றால் மலைக்க வைக்கும் பரிசு தொகையும் நிச்சயம். தொழில் ரீதியாக கற்றுக்கொள்வதற்கு தனியாக பாடப்பிரிவுகள் உள்ளன. திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி, அரசு இசை கல்லூரிகளில் பரதக்கலை கற்றுக்கொடுக்கப்படுகிறது. நுண்கலை பட்டப்படிப்பாகவும், சான்றிதழ் படிப்பாகவும் வழங்கப்படுகிறது. கட்டணமும் மிக குறைவு.பள்ளி மேற்படிப்பு முடித்து ஓரளவு நடனம் ஆட தெரிந்திருந்தால் போதும். உங்களை 'கால் தேர்ந்த' நடன கலைஞராக இக்கல்லூரிகள் உருமாற்றி விடும். தற்போது பெருகி வரும் பன்னாட்டு நிறுவனங்கள், பணியாற்றுவோருக்கு மன அழுத்தத்தை குறைக்க இதுபோன்ற தொழில்முறை நடன கலைஞர்களை கொண்ட சிறப்பு பிரிவுகளையும் அமைத்து கொள்கின்றன. இவர்கள் அலுவலக பணிகளோடு விடுமுறை காலங்களில் மற்ற ஊழியர்களுக்கு நடனம் கற்று கொடுக் கிறார்கள். |
தாறுமாறாக ஓடிய பள்ளி வேன் மோதி ஒருவர் பலி |
பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வேன், இன்று காலை வழக்கம் போல மாணவர்களை ஏற்ற புஜ்ஜிரெட்டி பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. பொதட்டூர்பேட்டை சவுட்டூரை சேர்ந்த டிரைவர் சிவா (33) என்பவர் ஓட்டினார்.நகரி சாலையில் ஒரு வளைவில் வேகமாக வேன் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. சாலையோரம் சைக்கிளில் நின்றிருந்த பொதட்டூர்பேட்டையை சேர்ந்த விநாயகம் (45) என்பவர் மீது வேன் பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விநாயகம் இறந்தார்.தகவல் அறிந்து பொதட்டூர்பேட்டை எஸ்ஐ தனசேகரன் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். |
வேலைவாய்ப்பை அள்ளித் தரும் கடல்சார் முதுகலை படிப்புகள் |
உலகம் முழுவதும் கடல்சார்ந்த தொழில்களுக்கு என்றுமே கிராக்கி அதிகம். பரந்து விரிந்த கடலைப்போலவே வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. கடல்சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு 100 சதவீதம் வேலை உத்திரவாதம் உண்டு. இதனால்தான் இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் The Centre of Advanced Study (CAS) »TC அங்கீகாரத்துடன் எம்எஸ்சி பிரிவில் பல்வேறு கடல்சார் படிப்புகளை வழங்கி வருகிறது. எம்எஸ்சி பிரிவில் மரைன் பயாலஜி அண்ட் ஓஷனோகிராபி, கோஸ்டல் அக்வாகல்ச்சர், மரைன் பயோ டெக் னாலஜி, மரைன் புட் டெக்னாலஜி, மரைன் மைக்ரோ பயாலஜி, ஓஷன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மரைன் பார்மகாலஜி, மரைன் கெமிஸ்ட்ரி ஆகிய முழுநேர படிப்புகள் நடத்தப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு கடல்சார்ந்த தொழில்கள் மட்டுமின்றி கல்வித்துறை, ஆராய்ச்சித்துறைகளிலும் வேலைவாய்ப்பு கள் காத்திருக்கின்றன. இதில் சேருவதற்கு தனித் தனியாக கல்வித்தகுதி, மதிப் பெண் சதவீதம் வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படிப்புகள் ஆங்கில வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளின் கால அளவு 2 ஆண்டுகள். ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர்களாக பிரித்து (ஜூலை-நவம்பர், டிசம்பர்- ஏப்ரல்) தேர்வுகள் நடத்தப்படும். சம்பந்தப்பட்ட இளங்கலை பாடப் பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, ஓபிசி பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவுப்படி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு மற்றும் உரிய சலுகைகள் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.300ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.200ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கால அவகாசம், கட்டண விகிதம் மற்றும் இதர விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். |
கஞ்சா விற்றவர் கைது |
கஞ்சா வைத்திருந்த மாட்டு இறைச்சிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை, செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (32). மாட்டு இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கஞ்சா வியாபாரம் செய்வதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அவரை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். நேற்று கஞ்சா வைத்திருக்கும் போது பாஸ்கரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பாஸ்கரை கைது செய்து விசாரிக்கின்றனர். |
பாரதியார் பல்கலை வழங்குகிறது எம்பிஏ படிப்பில் 14 பிரிவுகள் |
மேலாண்மை படிப்பில், வணிக நிர்வாகம், நிதி நிர்வாகம், ஏற்றுமதி, மருத்துவமனை, சந்தை நிர்வாகம் என பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. நல்ல சம்பளத்தோடு உடனே வேலை கிடைத்துவிடும் என்பதால் மாணவர்கள் எம்பிஏ படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உரிய பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, அத்துறையில் வேலை நிச்சயம். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 14 வகையான எம்பிஏ படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு படிப்பும் உடனடி வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு, தனித்திறமை மேம்பாடு, ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.எம்பிஏ (மார்க்கெட்டிங் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்)எம்பிஏ (மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (டூரிசம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (பைனான்சியல் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (இன்டர்நேஷனல் பிசினஸ்)எம்பிஏ (ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (ரீடெய்ல் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (பைனான்சியல் சர்வீஸ்)எம்பிஏ (என்டர்பிரனர்ஷிப்)எம்பிஏ (சர்வீசஸ் மேனேஜ்மென்ட்)எம்பிஏ (எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட்) ஆகிய படிப்புகளை பாரதியார் பல்கலைக்கழகம்வழங்கி வருகிறது. அனைத்துபடிப்புகளுக்குமே ஏதேனும்ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். படிப்பின் கால அளவு 2 ஆண்டுகள். மாணவர் சேர்க்கை, கட்டணம், வகுப்புகள் துவங்கும் தேதி உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். |
பெண் போலீசிடம் தகராறு வெள்ளானூர் ஊராட்சி மாஜி துணை தலைவர் கைது |
செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் மல்லிகா (28). நேற்றிரவு, செங்குன்றம் பஸ் நிலையம் ஜி.என்.டி சாலையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். அப்போது காட்டூர், பெருமாள்கோயில் தெருவை சேர்ந்த தணிகையரசு (40), பைக்கில் வேகமாக வந்தார். இவர், வெள்ளானூர் ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவர். வேகமாக வந்ததால் பைக்கை மல்லிகா நிறுத்தினார்.இதனால் ஆத்திரம் அடைந்த தணிகையரசு, மல்லிகாவிடம் இருந்த லத்தியை பறித்தார். பின் அவரிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஜி.என்.டி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். தகராறு செய்த தணிகையரசை கைது செய்து விசாரிக்கிறார்கள். |
ஆட்டோமேஷன் படிக்க பத்தாம் வகுப்பே போதும் |
எட்டாவது படித்தாலே அரசு வேலையில் சேரமுடியும் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்கே எட்டாம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவில் அனைவரும் இந்த குறைந்தபட்ச கல்வியை எட்டவேண்டும் என்ற நோக்கில் கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்தால்தான் ஐடிஐ உள்ளிட்ட தொழிற்படிப்புகளில்கூட சேரமுடியும்.ஆனால் சிலருக்கு 10ம் வகுப்புக்கு பின்னர் மேல்நிலைக்கல்வியை பள்ளிகளில் தொடர விருப்பம் இருப்பதில்லை. 10ம் வகுப்பு முடித்தவுடன் தொழிற்சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாகவே வேலைவாய்ப்புகளை குறிவைத்து பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இவர்கள் முதலில் சேருவது தட்டச்சுப்பயிற்சி. கம்ப்யூட்டர் யுகமாகிவிட்ட நிலையில் தட்டச்சுப்பயிற்சி மட்டும் முடித்தால் பணி வாய்ப்பை பெறுவது கடினம்.இதற்கு பிறகு என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண் டும்? என்ற குழப்பத்தில் தவிப்பவர்களுக்கு ஆபீஸ் ஆட்டோமேஷன் படிப்பு (Computer on Automation ExaminationDecember 2010) உதவுகிறது. தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் இந்த சான்றிதழ் படிப்பிற்கு தற்போது மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படும் இளநிலை தட்டச்சர் தேர்வில் (தமிழ்/ஆங்கிலம்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இத்தேர்வு நடைபெறும். எழுத்துத்தேர்வு வரும் டிச.18லும், தட்டச்சுத்தேர்வு டிச.19லும் இரண்டு தாள்களாக தலா 2 மணி நேரம் நடத்தப்படும். எழுத்துத்தேர்வுக்குரிய உபகரணங்கள் தேர்வு மையத்தில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை ரூ.50 செலுத்தி சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரிலும், www.tndte.com என்ற இணையதளத்தில் ரூ.47 செலுத்தி பதிவிறக்கமும் செய்யலாம். வரும் நவ.8ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பம் பெற முடியும். தேர்வுக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க ரூ.530 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணத்தை ‘Additional Director of Technical Examination (Exam) Chennai25‘ என்ற பெயரில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ‘Additional Director of Technical Examination (Exam I/C), Director of Technical Education, Chennai 600025‘ என்ற முகவரிக்கு வரும் நவ.12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். |
சிவப்பு விளக்கு காரில் சென்று கோடி கோடியாய் கொள்ளை |
திருட்டு காரில் சிவப்பு விளக்கு பொருத்திக் கொண்டு டெல்லியில் நூதனமான முறையில் கோடிகோடியாக கொள்ளையடித்து வந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், நகைகள், பணம் மீட்கப்பட்டது.தலைநகர் டெல்லியில் ஒரு பெண்ணிடம் செயின் பறித்துக் கொண்டு தப்பிய திருடன் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் டெல்லி சோனேபட் பகுதியை சேர்ந்த விஷால் சர்மா என தெரிந்தது. அவனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். வழிப்பறியில் தன் நண்பன் வருண்குமாரும் உடந்தை என்றான். அவனையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் ரொக்கம், 9 தங்க செயின்கள், சிவப்பு விளக்கு பொருத்திய Ôஹோண்டா அக்கார்டுÕ கார், ஷூண்டாய் ஐ10 கார், பஜாஜ் பல்சர் பைக் ஆகியவற்றை கைப்பற்றினர். திருடர்கள் கொள்ளையடித்த விதம் குறித்து டெல்லி துணை கமிஷனர் சாயா சர்மா கூறியதாவது:சோனேபட் பகுதியை சேர்ந்த நண்பர்கள் விஷால் சர்மா (25), வருண் குமார் (25) ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். கிடைத்த நகைகளை ஆசாரியிடம் கொடுத்து வேறு டிசைன் நகைகளாக மாற்றி விற்றுள்ளனர். இதில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. பின்னர் ரோட்டில் நிற்கும் கார்களையும் திருட ஆரம்பித்தனர். காரில் சென்றே கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். போலீசாரால் தங்களுக்கு தொந்தரவு, ஆபத்து இருக்கக் கூடாது என்று கருதி காரில் சிவப்பு விளக்கு பொருத்திக்கொண்டு வலம் வந்துள்ளனர். டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் உள்ள மெட்ரோ ஸ்டேஷனில் காரை பார்க் செய்துவிட்டு, அங்கிருந்து பைக்குகளில் கொள்ளையடிக்கச் சென்றுள்ளனர். வங்கியில் அதிக பணம் எடுப்பவர்களை நோட்டமிட்டு, பின்தொடர்ந்து சென்று வழிப்பறி செய்துள்ளனர்.கொள்ளையடித்துக் கொண்டு பைக்கில் மீண்டும் ரமேஷ் நகர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு வருவார்கள். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு சிவப்பு விளக்கு காரில் தப்பிவிடுவார்கள். இதனால், செக்போஸ்ட் போலீசில் சிக்காமல் இருந்தனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து சோனேபட் மற்றும் செக்டர்12&ல் வீடு கட்டியுள்ளனர். அப்பகுதியில் நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கு தாராளமாக வாரி வழங்கியுள்ளனர். புரோக்கர் தொழில் செய்வதாக கூறியதால் அப்பகுதியினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. சிவப்பு விளக்கு காரை பயன்படுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் செயின் பறிப்பில் சிக்கிவிட்டனர்.இவ்வாறு சாயா சர்மா கூறினார். |
சாப்ட்வேர் துறைக்கு இணையான இ-மீடியா |
உலகளாவிய அளவில் மீடியா துறை கொடிகட்டி பறக்கிறது. வேலைவாய்ப்புகளும் இத்துறையில் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக் மீடியா துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஊதிய மும் சாப்ட்வேர் துறைக்கு இணையாக அளிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் மீடியா சார்ந்த படிப்பறிவுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.இதுபோன்றவர்களுக்கு கல்வித்தகுதியை அளிக்கும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல் வேறு மீடியா படிப்புகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் வேலைவாய்ப்பை அளிக்கும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முதுகலை பட்டம், டிப்ளமோ படிப்புகள் தவிர காமராஜர் பல்கலைக்கழகத் தின் தகவல் தொடர்பு பாடத் துறை எம்எஸ்சி இ&மீடியா கம்யூனிகேஷன் என்ற 2 ஆண்டு கால முதுகலை படிப்பை கடந்த 2006ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.எல்சிடி புரொஜக்டர், மல்டிமீடியா லேப், வீடியோ மற்றும் டிஜிட்டல் கேமரா, ஆடியோ சிஸ்டம் குறித்த சிறப்பு பயிற்சிகளுடன் இப்பாடப்பிரிவு நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு இத்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீடியா துறை, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன், சினிமா துறை, சவுண்ட் இன்ஜினியரிங், வெப் டிசைனிங், இ&கன்டென்ட் அண்ட் சினிமாட்டோகிராபி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு எம்எஸ்சி இ-மீடியா கம்யூனிகேஷன் படிப்பு மிகுந்த பயனளிக்கும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் எம்எஸ்சி இ&மீடியா கம்யூனிகேஷன் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு எதுவும் கிடையாது. இப்படிப்பு தவிர கம்யூனிகேஷன் துறை மூலம் எம்பில் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ் என்ற ஆராய்ச்சி படிப்பும் நடத்தப்படுகிறது. எம்ஏ இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், மீடியா கம்யூனிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட், எம்எஸ்சி இ-மீடியா கம்யூனிகேஷன்ஸ், எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை பிலிம் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இப்படிப்பை முடித்தவர்கள் மாஸ் மீடியா நிறுவனங்கள், நெட்வொர்க் ஏஜென்சிகள், சாப்ட்வேர் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெறலாம். மாணவர் சேர்க்கை, விண்ணப்ப கட்டணம், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். |
திரவமாக ஏற்றுமதி.. பவுடராக இறக்குமதி சூடு பறக்க நடக்கும் ஓபியம் கடத்தல் |
‘ஓபியம் பாப்பி’ என்பது ஒரு தாவரம். இதன் பூவில் அரிய வகை மருந்து இருப்பதை இங்கிலாந்து டாக்டர்கள் 1860&ம் ஆண்டு கண்டுபிடித்தனர். வலி நிவாரணம், தீராத நோய்களுக்கு அரிய மருந்தாக அது பயன்படுத்தப்பட்டது. பின்னர், இதை போதைப் பொருளாகவும் சிலர் பயன்படுத்த ஆரம்பித்தனர். பாப்பி பூவில் எடுக்கப்படும் திரவம்தான் ஓபியம். லேகியம் போன்றுள்ள இதில் இருந்துதான் ஹாஷிஸ் எண்ணெய், ஹெராயின், மார்பின், கொடீன் போன்ற போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், ஓபியம் கடத்தல் உலகம் முழுவதும் நடக்கிறது.இந்தியாவில் ராஜஸ்தான், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களில் பல பகுதிகளில் ஓபியம் பாப்பி செடி பயிரிடப்படுகிறது. பயிரிட்ட பிறகு செடியை முழுமையாக மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மருந்து தயாரிப்புக்கு அரசே இதை பயன்படுத்திக் கொள்ளும். ஆனால், மருந்து குடோன்களுக்கு அனுப்பும்போது இதை போதை கும்பல் பெரிய தொகை கொடுத்து கடத்தி விடுகின்றனர்.கப்பல், விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. பின்னர் திரவமாக உள்ள ஓபியத்தை பவுடராக மாற்றுகின்றனர். இதையடுத்து இலங்கை, நைஜீரியா, கொலம்பியா, ஆப்ரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்பட பல நாடுகளில் இருந்து ஓபியம் பவுடர் சென்னைக்கு மீண்டும் கடத்தப்படுகிறது. இதை விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இதுபோல ஹெராயின், கோக்கைன், கேட்டமைன் போன்ற போதை பொருட்களையும் கும்பல் கொண்டு வருகிறது. வேலை இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களை தேடி பிடித்து இந்த வேலைகளுக்கு பயன்படுத்துகிறது சர்வதேச போதை கும்பல். அவர்களை மூளைச்சலவை செய்து போதை கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.இதுபற்றி மத்திய போதை போருள் கடத்தல் புலனாய்வு பிரிவு டிஐஜி டேவிட் ஆசீர்வாதம் கூறியதாவது: போதை பொருட்களை கடத்தி கொண்டு வர இளைஞர்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுகிறார்கள். 1998 முதல் 2008 வரை போதை பொருள் கடத்தல் தொழில் கொடிகட்டி பறந்தது. தீவிர நடவடிக்கை எடுத்த பிறகு வெகுவாக குறைந்துள்ளது. 1998 முதல் 2005 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 597 கிலோ ஹெராயின், 37 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 212 கடத்தல் ஆசாமிகள் பிடிபட்டுள்ளனர்.தற்போது ஓபியம் பாப்பி போதை பொருள் கடத்தல் படுஜோராக நடக்கிறது. வெளிநாடுகளில் இதற்கு கடும் கிராக்கி. உணர்ச்சியை தூண்டுவதற்கு இந்த போதை பொருள் பயன்படுகிறது. இதனை உட்கொள்வதால் பக்கவிளைவுகள், உடல்நலம் குன்றுதல், தூக்கமின்மை, கல்லீரல் பாதிப்பு, தோல் அலர்ஜி ஏற்படும். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். |
கோவா அமைச்சர் வீட்டில் வருமானவரி ரெய்டு |
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ராஜினாமா செய் தார். அவருக்கு மீண்டும் பதவி வழங்கக்கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனால் கோவா கூட்டணி அரசுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டது. மேலிட தலைவர்கள் தலையிட்ட பின்னரும் அங்கு சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநில சுகாதார அமைச்சருமான விஸ்வஜித்ரானே, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானேவின் மகன் ஆவார். இந்நிலையில், விஸ்வஜித் ரானேவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பனாஜியில் உள்ள அவரது வீடு, மிராமார், சகாலிம் மற்றும் பழைய கோவா ஆகிய இடங்களில் உள்ள அமைச்சரின் அலுவலகங்கள் ஆகி யவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. |
ஆசிரியர் சொத்து விவரம் வெளியிட முதல்வர் உத்தரவு |
பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்றவுடன் ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும் என அறிவித்தார். கடந்த வாரம் தன் சொத்து விவரங்களை வெளியிட்டதுடன் அமைச்சரவை சகாக்களின் சொத்து விவரங்களையும் வெளியிட செய்தார். இந்நிலையில், அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என நிதிஷ்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 31&க்குள் அனைத்து ஆசிரியர்களும் தங்களது சொத்து விவரங் களை மனிதவள மேம்பாட்டு துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு ஆணையில் தெரி விக்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை அளிக்காத ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்ப டாது என மனித வளத்துறை முதன்மை செயலாளர் அஞ்சனி குமார் சிங் தெரிவித்துள்ளார். |
டாக்டருக்கு ஆபாச எஸ்எம்எஸ் போலீஸ் கமிஷனர் மீது விசாரணை |
ஆந்திர மாநிலம் விஜயவாடா போலீஸ் கமிஷனராக இருப்பவர் ஆஞ்சநேயலு. விஜயவாடாவை சேர்ந்த பெண் டாக்டருக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் டிவி ஒன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயலு மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறையில் செல்லுமாறு ஆஞ்சநேயலு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் அவர் பல பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது தொல்லை தாங்க முடியாமல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பெங்களூருக்கு மாற்றலாகி சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. |
பெண் சாமியார் பிரக்யாசிங் சகோதரர் தற்கொலை முயற்சி |
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008&ம் ஆண்டு செப்டம்பர் 29&ம் தேதி மசூதி அருகே குண்டு வெடித்தது. இது தொடர்பாக அபினவ் பாரத் என்ற அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யாசிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரக்யாக் சிங்கின் சகோதரர் ஆனந்த் பிரம்மச்சாரி, தெற்கு டெல்லியில் ஜங்புரா பகுதியில் குடியிருந்து வருகிறார். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக இவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் ஆனந்த் மயங்கிக் கிடந்தார். அருகில் கடிதம் ஒன்று கிடந்தது. அதில் போலீஸ் தொல்லை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. உடனடியாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். |
மரணத்தில் முடியும் கள்ளக் காதல்கள் |
கணவனைத் தவிர யாரிடம் சிரித்துப் பேசினாலும் பிரச்னையில்தான் முடியும். 3 குழந்தை களுக்கு தாய், டாக்சி டிரைவரிடம் நெருங்கிப் பழகியதில் பிரச்னை ஏற்பட்டு கழுத்தறுபட்டு இறந்திருக்கிறார். சென்னையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் மாரி. கறிக்கடையில் வேலை செய்கிறார். மனைவி உமா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2 மகள், ஒரு மகன் உள்ளனர். உமா ட்ரிபுள் எஸ் என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். சமீபத்தில் குடும்பத்துடன் டிராவல்ஸ் காரில் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர். காரை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டியுள்ளார். சுற்றுலா முடிந்து திரும்புவதற் குள் உமா குடும்பத்துடன் மணிகண்டன் நெருங்கிப் பழகிவிட்டார். பின்னர் வீட்டுக்கு அடிக் கடி வந்து சென்றுள்ளார். அப்போது மணிகண்டனுக்கும் உமாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாவிட்டால் இருவரும் உல்லாசமாக இருப்பார்களாம். இந்த நிலையில், என்னுடன் வந்துவிடு. நாம் தனியாக குடும்பம் நடத்தலாம் என்று உமாவை அழைத்துள்ளார் மணிகண்டன். கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வரமாட்டேன் என அவர் மறுத் துள்ளார். என்னுடன் வராவிட்டால் உன்னை சும்மா விடமாட்டேன் என மணி மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து கணவனிடம் உமா கூறினார். போலீசில் புகார் செய்யலாம் என்ற போது குடும்பத்துக்கு அவமானம் வந்துவிடும் என கூறி உமா மறுத்துவிட்டார். இந்நிலையில் உமாவை கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன் நெல்லைக்கு தப்பிச் சென்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கள்ளத் தொடர்பு தெரியவந்துள்ளது. கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.காதலைக்கூட ஒழித்து விடலாம், கள்ளக் காதலை ஒழிக்க முடியாது. அந்த அளவுக்கு டாப் டு பாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. ஆத்திரத்தில் கொலை, அவமானத்தில் தற்கொலை, தீக்கு ளிப்பு, அடுத்த பிறவியில் ஒன்றுசேர முடிவு செய்து ரயில் முன் விழுவது என அனைத்து வகையான துர்மரணங்களுக்கும் காரணமாகி விடுகிறது கள்ளக்காதல். எந¢தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது என நினைத்து, அதில் மயங்கி கல்யாணம் ஆன பெண்களையும் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் ஆண்கள். பெண்களோ, கணவனி டம் இல்லாத ஒன்று காதலனிடம் இருப்பதாக நம்பி களத்தில் இறங்குகிறார்கள். இது ரெண் டுமே தவறு என மூளை சொன்னாலும் மனது கேட்பதில்லை. மூழ்கி முத்தெடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதில் இருந்து வெளியேற நினைத்தாலும் முடியாமல் போய்விடுகிறது. கணவன், குழந்தைகள் கண் முன் வருகிறார்கள். கள்ளக் காதலனுடன் போக மறுக்கிறார்கள். அப்போது தான் இதுபோன்ற கொலைகள் நடக்கிறது. எல்லா கள்ளக் காதலர்களுக்கும் இதுதான் முடிவு. |
கோவை ஏர்போர்ட்டில் பயணியிடம் 200 கோல்டன் பிஷ் பறிமுதல் |
கோவை விமான நிலையத்துக்கு நேற்றிரவு 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சில்க் ஏர் விமா னம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த சாகுல் என்ற சாதிக் (42) என்ப வர் கொண்டு வந்த பையில் தங்க நிறத்திலான 200 மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மீன் களின் மொத்த எடை ஒன்றரை கிலோ. இதன் மதிப்பு ரூ.1.35 லட்சம். முறையாக இறக்குமதி வரி செலுத்தாமல் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து மீன்கள் பறிமுதல் செய்யப் பட்டன. சுங்கத்துறையினர் கூறுகையில், ‘மீன்களுக்கு முறையாக இறக்குமதி வரி செலுத்தினால் ரூ.7 ஆயிரம். கடத்தி வந்ததால் அபராதமாக 5 மடங்கு தொகை வசூலிக்கப்படும். அத்தொ கையை செலுத்தினால் அவர் விடுவிக்கப்படுவார். மீன்கள் திரும்ப வழங்கப்படும்’ என்றனர். |
உத்தரகண்டில் பஸ் கவிழ்ந்து 22 பேர் பலி |
உத்தரகண்ட் மாநிலத்தில் ஐம்பது அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உள்பட 22 பேர் பரிதாபமாக பலியாயினர்.உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் & முசூரி சாலையில் நேற்றிரவு இந்த பயங்கர விபத்து நடந்த து. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாண்டையொட்டி, குடும்பத்துடன் சிலர் முசூரிக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர். 40க்கும் மேற¢பட்டோர் பஸ்சில் இருந்தனர். முசூரிக்கு சென்ற பின், அனைவரும் ஹரித்வாருக்கு புறப்பட் டனர். நேற்றிரவு டேராடூன்&மூசூரி சாலையில் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். வேகமாக சென்ற பஸ், எதிர்பாராத விதமாக, சாலையோரமாக இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உ ருண்டது. இதில் உடல் நசுங்கி 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 22 பேர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார்கள். விபத்தை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 24 பேரை மீட்டு, அவர் கள் அனைவரையும் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். |
நக்சலை தேடும் வன காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை |
கொடைக்கானல் வனப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை மற்றும் தனிப்படை போலீசாருக்கு உதவியாக வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்களும் செல்கின்ற னர். கடந்த மாதம் கொடைக்கானல் வனப்பகுதியில் தேடுதல் வேட்டைக்கு சென்ற வனக்காவ லர் முத்துவீரன் திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து உடல் ஆரோக்கியமாக இ ருப்பவர்களையே நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்த வனத்துறை முடிவு செய்தது. இதற்காக கொடைக்கானலில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் வனத் துறை அதிகாரிகள், காவலர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இசிஜி போன்ற பரிசோத னைகள் செய்யப்பட்டன. |
பழநி தைப்பூச திருவிழா போலி கைடுகளுக்கு எச்சரிக்கை |
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் தைப்பூச திருவிழா துவங்க உள்ள நிலையில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் நலன்கருதி, காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து எஸ்பி தினகரன் கூறுகையில், ‘‘விபத்து அபாயமுள்ள 12 இடங்களில், சாலை தடுப் புகள் வைக்கப்பட உள்ளன. பக்தர்களை ஏமாற்றும் போலி கைடுகளை கைது செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பக்தர்களுக்கு இடையூறு செய்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். பக்தர்களுக்கு அடையாளம் காட்டும் வகையில், நகரில் 30 முக்கிய இடங்களில் குற்றவாளிகளின் புகைப்படத்துடன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மின்னும் ஒளிக்குச்சிகள் வழங்கும் பணி துவங்கப்பட் டுள்ளது. இதற்காக 50 ஆயிரம் ஒளிக்குச்சிகள் தயாராக உள்ளன’’ என்றார். |
வடமாநில தேவை அதிகரிப்பால் முட்டை விலை கிடுகிடு |
நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடந்தது. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் அங்கு முட்டை தேவை அதிகரித்து வரு கிறது. பிற மண்டலங்களிலும் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருகிறது. எனவே, நாமக் கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முட்டை விலையில் 5 காசு உயர்த்தப்பட்டு 291 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கோழிப்ப ண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலை. நாமக்கல்லில் இருந்து தினமும் வடமாநிலங் களுக்கு 40 முதல் 50 லட்சம் முட்டைகள் செல்கிறது. பனி காரணமாக நாமக்கல் மண்டலத் தில் முட்டை உற்பத்தியும் சற்று குறைந்துள்ளது. எனவே, முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ள தாகவும், இந்த விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். |
சபரிமலையில் நெரிசல் ஐகோர்ட் கண்டிப்பு |
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத கூட்டம் அலை மோதுகிறது. இரு தினங்களுக்கு முன்பு பம்பையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் பரிதா பமாக இறந்தார். 20&க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தேவசம்போர்டின் கணக்கு தணிக்கை விவரம், கேரள ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், பவதாசன் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், சமீபத்தில் பம்பையில் நெரிசல் மூலம் பக்தர் பலியான சம்பவம் குறித்து விசாரித்தனர்.தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘சபரிமலையில் நெரிசல் மூலம் விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை போலீசும், தேவசம் போர்டும் மேற்கொள்ள வேண்டும். தடுப்பு வேலி அமைக்கும்போது அதை போலீஸ் உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பக் தர்களுக்கு எந்த விதத்திலும் சிரமங்களோ தேவையில்லாத கட்டுப்பாடுகளோ ஏற்படுத்தக் கூடாது’’ என்றனர். |
சட்டசபை தேர்தல் பணிக்காக 3 லட்சம் அரசு ஊழியர் பட்டியல் தயாரிப்பு தீவிரம் |
சட்டசபை தேர்தல் பணிக்காக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிர மாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு 15,000 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன. தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 16ம் தேதியுடன் முடிகிறது. இதை முன்னிட்டு, சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ள து. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, அரசியல் கட்சிய¤னர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடு த்து, சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.தேர்தல் பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படும். ஓட்டுப்பதிவு செய்வது முதல் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை கள் அனைத்தும், பயிற்சியின் போது உயர் அலுவலர்களால் விளக்கப்படும். சட்டசபை தேர்தலை பொறுத்தவரை வாக்குச் சாவடிகளில் ஒரு தலைமை வாக்குப்பதிவு அலு வலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1, 2, 3, 4 ஆகிய 5 அலுவலர்கள் பணியாற்றுவர். இவர் கள் தவிர வாக்குச் சாவடிகளை கண்காணிக்க மண்டல அலுவலர்களும், பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க மைக்ரோ அப்சர்வர்களாக மத்திய அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.தேர்தல் பணிக்கு 3 லட்சம் அரசு ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற அரசு ஊழியர்களின் பட்டியலை தயாரிக்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவு பிறப் பித்தார். தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவை அடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர் களின் பட்டியல் கோரப்பட்டுள்ளது. மைக்ரோ அப¢சர்வர்களாக பணியாற்ற கலால் துறை, வரு மான வரித்துறை, வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் பட்டியலையும், மாவட்ட நிர்வாகம¢ கோரியுள¢ளது. எனினும், பட் டியல் தயாரிக்க சிறிது கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், பட்டியல் தயாரிக்கும் பணி மாவட்டங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்கள் அந்தந்த மாவட்டங்களில் வைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க என்எல்சி ஒப்பந்தம் |
கர்நாடகாவுக்கு என்எல்சி சார்பில் மின்சாரம் வழங்க எடியூரப்பா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. நெய்வேலி என்எல்சி நிறுவனம் தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களை இயக்கி வருகிறது. தற்போது தூத்துக்குடியில் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையத்தை அமைத்து வருகிறது.இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே மணிக்கு 19 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் (1980 மெகாவாட்) திறன் கொண்ட மின் நிலையத்தையும், உத்தரப்பிரதேச மாநிலம் காதாம்பூர் பகுதியில் மணிக்கு 20 லட்சம் யூனிட் தயாரிக்கும் மின் நிலையத்தையும் அமைக்க என்எல்சி திட்டமிட்டுள்ளது. சீர்காழியில் ரூ.10 ஆயிரத்து 395 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மின் நிலையத்திலிருந்து பெறப்படும் மின்சாரம் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. கர்நாடகாவுக்கு சுமார் 400 மெகாவாட் (மணிக்கு 4 லட்சம் யூனிட்) மின்சக்தி வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒப்பந்தம், நேற்று முன்தினம் பெங்களூரில் கையெழுத்தானது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் என்எல்சி 2&ம் அனல்மின் நிலையம் மற்றும் விரிவாக்க தலைமை பொது மேலாளர் பால்பாண்டி, கர்நாடக மின் கழக உறுப்பு அமைப்பான எஸ்காம்ஸ் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். |
நடுக்கடலில் கப்பல் மோதி விசைப்படகு உடைந்தது |
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது கப்பல் மோதியது. விசைப்படகில் இருந்த மீனவர்கள் கதி என்னவென்று தெரியாததால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக்கொண்டு திரும்பும்போது, கரையில் இருந்து சுமார் 17 கி.மீ. தூரத்தில் விசைப்படகு ஒன்று உடைந்து கிடந்ததை பார்த்தனர். விசைப்படகின் உடைந்த பகுதி, கேஸ் சிலிண்டர், டீசல் கேன்கள், 5 லிட்டர் பாமாயில் கேன்கள் போன்றவற்றை கரைக்கு எடுத்து வந்தனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கடலில் கிடந்த பலகையில் மலையாளம் மற்றும் ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. இந்த விசைப்படகு குமரி மாவட்டத்தை சேர்ந்ததாக இருக்கலாம். உடைந்த பாகங்களை பார்க்கும்போது கப்பல் மோதி விசைப்படகு உடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. விசைப்படகில் இருந்தவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை’’ என்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
காமன்வெல்த் முறைகேடு புகார் 10 இடங்களில் சிபிஐ சோதனை |
காமன்வெல்த் போட்டி ஏற்பாடு செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் 10 இடங்களில் சிபிஐ போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிக்கான கருவிகள் வாங்கியது, துவக்க விழா ஏற்பாடுகள், சமையல் கான்ட்ராக்ட் என பல ஒப்பந்தங்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு உயர் அதிகாரிகள் 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 24&ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அவரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த ஊழல் தொடர்பாக இதுவரை 3 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளன. இன்று 4&வது எப்ஐஆரை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்நிலையில், ஊழல் தொடர்பாக டெல்லியில் கல்மாடி உதவியாளர் வர்மா வீடு உள்பட 10 இடங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது. காமன்வெல்த் டெண்டர் எடுத்த 4 நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. |
2 ஆண்டுகள் லீவு போட்ட போலீசுக்கு மீண்டும்வேலை ஐகோர்ட் உத்தரவு |
முறையாக தகவல் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் பணிக்கு வராத போலீஸ்காரரை மீண்டும் பணியில் சேர்க்கவும், அவருக்கு பணப் பலன்களை வழங்க வேண்டியதில்லை எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான்போஸ்கோ என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:மதுரையில் 1986&ல் இரண்டாம் நிலை காவலராக பணி நியமனம் செய்யப்பட்டேன். 2007&ல் குமரி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டேன். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2007 மார்ச் 23 முதல் 2009 ஜனவரி 29 வரை சிகிச்சை பெற்றேன். 2009 ஜனவரி 29&ல் பணியில் மீண்டும் சேர்வதற்கான தகுதி சான்றிதழை மனநல மருத்துவர் வழங்கினார்.அந்த சான்றிதழுடன் பணியில் சேர சென்றபோது, தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்ததாக கூறி பணியிலிருந்து 2008 மே 29&ல் என்னை நீக்கி விட்டதாக தெரிவித்தனர். பணி நீக்க உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்த்து, அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நிஷாபானு ஆஜரானார்.மனுவை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், ‘‘தகவல் தெரிவிக்காமல் பணிக்கு தொடர்ந்து வராமல் இருப்பவர்களை பணி நீக்கம் செய்வது அதிகபட்ச தண்டனை அவர்களுக்கு சம்பள உயர்வை நிறுத்தி வைக்கலாம் என்றும் பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, மனுதாரரை 4 வாரத்தில் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். அவருக்கு பணித்தொடர்ச்சி வழங்க வேண்டும். பணப் பலன்களை வழங்க வேண்டியதில்லை’’ என்று தீர்ப்பளித்தார். |
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்குடை திருட்டு |
திருப்பதி ஏழுமலையானின் தேரில் பொருத்தப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கு டையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர். பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளை அகற்றிவிட்டு இந்த துணிகர திருட்டு நடந்துள்ளது. இதையறிந்த பக்தர்கள் க டும் அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட் டுள்ளனர்.உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். நேர்த்திக்கடனுக்காக பணம் மற்றும் தங்க, வைர நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ஏழுமலையான் கோயிலுக்கு நக்சலைட் மற்றும் தீவிரவாதிகள £ல் அச்சுறுத்தல் இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கோயில் மற்றும் திருமலை முழுவதும் மாநில போலீசாருடன் மத்திய சிறப்பு படையினர், ஆக்டோபஸ், துணை ராணுவப்படை, ஆயுதப்படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர் கள் என 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின்போது காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். பிரமோற்சவத்தின் 7&ம் நாள ன்று மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் மாடவீதியில் பவனி வருவார். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ரதத்தை தரிசிக்க குவிவார்கள். இந்த ரதம் முழுவதும் தங்கத்தகடுகளால் செய் யப்பட்டுள்ளது. இதன் உச்சியில் 3 அடி உயர தங்கக் குடை அமைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தங்க ரதம், ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள வாகன மண்டபத்தின் பின்புறத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தங்க ரதத்தை சுற்றிலும் இரும்பு முள்வேலியும், வெயில் மற்றும் மழையால் சேதம் அடையாதபடி இரும்பு தகடு அமை த்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயில் அருகே 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டமும், பாதுகாப்பு பணியில் போலீசாரும் இருப்பார்கள்.இந்நிலையில், நேற்றிரவு மர்ம ஆசாமிகள் தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை வெட்டி உள்ளே புகுந்துள்ளனர். சுமார் 30 அடி உயரமுள்ள தங்கத்தேர் மீது ஏறி, உச்சியில் பொருத்தப்பட்டிருந்த தங்கக்குடையை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதி காரிகள், தங்க ரத பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த முள்வேலிகள் வெட்டப்பட்டிருந்ததையும், தங்கக் குடை திருட்டு போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடி யாக ராயலசீமா ஐ.ஜி. சந்தோஷ் மெஹரா, தேவஸ்தான இணை செயல் அதிகாரி பாஸ்கர், தி ருப்பதி எஸ்.பி. ரவீந்தர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர். தங்கக் கு டை திருட்டு குறித்து திருமலை போலீசில் தேவஸ்தான இணை செயல் அதிகாரி பாஸ்கர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவ ருகின்றனர்.இந்த துணிகர சம்பவம் குறித்து திருமலை தேவஸ்தான இணை செயல் அதிகாரி பாஸ்கர் கூறு கையில், ‘‘திருமலையில் பாதுகாப்பும், பக்தர்கள் அதிக நடமாட்டமும் உள்ள பகுதியில் நள்ளி ரவு யாரோ மர்ம நபர்கள் முள்வேலியை அகற்றிவிட்டு தங்க ரதத்தில் பொருத்தியிருந்த தங்கக் குடையை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும். விரைவில் குற்ற வாளிகள் பிடிபடுவார்கள்’’ என்றார்.திருமலையில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் ஏழுமலையானின் ரதத்தில் வைக்கப் பட்டிருந்த தங்கக்குடை திருட்டு போன சம்பவம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. |
கடும் பனி காரணமாக டெல்லி ரயில்கள் தாமதம் |
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தன.டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக சென்னை வரும் ரயில்கள் பல மணி நேரம்தாமதமாக வருகின்றன. ஜிடி எக்ஸ்பிரஸ் நேற்று 7 மணி நேரம் தாமதமாகவும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 9 மணி நேரம் தாமதமாகவும் வந்து சேர்ந்தன. அதனால் சென்னையில் இருந்து நேற்று இரவு 7.15 புறப்பட வேண்டிய ஜி.டி. எக்ஸ்பிரஸ் 8 மணிக்கும், இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 11.45 மணிக்கும் புறப்பட்டு சென்றன. இதுபோல இன்றும் காலை 6.05 மணிக்கு வரவேண்டிய ஜி.டி. எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாகவும், காலை 7.05 மணிக்கு வரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 5 மணி நேரம் தாமதமாகவும் வந்தன. அதுபோல் திருக்குறள் சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ் 9 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தது. |
இங்கிலாந்து சிறுமிகளை சீரழிக்கும் பாக். இளைஞர்கள் |
ஆசிய ஆசாமிகளிடம் சிக்கி இங்கிலாந்து சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆ ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இளைஞர்கள்தான் இந்த செயலில் அதிகம் ஈடுபடுவது தெரிந்துள்ளது. மேல்படிப்பு படிப்பதற்காகவும் வேலை விஷயமாகவும் இங்கிலாந் தில் தங்கியுள்ள பாகிஸ்தான் இளைஞர்கள் அங்கு படிக்கும் 11 வயது முதல் 16 வயது சிறுமி களிடம் நட்பாக பழக ஆரம்பிக்கின்றனர். அவர்களுக்கு கிப்ட் வாங்கி கொடுத்தும், வெளியிடங் களுக்கு அழைத்து சென்றும் தாராளமாக செலவு செய்கின்றனர். பின்பு அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி மது, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி தங்களின் பாலியல் தேவை களுக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களை தங்களின் நண்பர்களுக்கும் சப்ளை செய்கின்றனர்.இந்த குற்றத்துக்காக சவுத் யார்க்ஷயர் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பரில் 5 ஆசியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் தேவைகளுக்கு சிறுமிகளை பயன்படுத்திய குற்றத் துக்காக கடந்த 1997ம் ஆண்டு முதல் 56 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 53 பேர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இனரீதி யான பிரச்னையை ஏற்படுத்திவிடாமால் இந்த விஷயத்தை கவனமாக கையாள இங்கிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். |
ஊராட்சிகளில் பொங்கல் பை |
ஊராட்சிகளில் 2782 பேருக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் பை வழங்கப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பொங்கல் பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை 762 பேருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் வழங்கினார். துணைத் தலைவர் இந்திரா தனபால், கிராம நிர்வாக அலுவலர் எல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊனமாஞ்சேரி ஊராட்சியில் 460 பேருக்கு வேட்டி, சேலை, பொங்கல் பை ஆகியவற்றை தலைவர் ரங்கநாதன் வழங்கினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மண்ணிவாக்கம் ஊராட்சியில் 860 பேருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் எம்.டி.லோகநாதன் வேட்டி,சேலை, பொங்கல் பை வழங்கினார். இதில் துணைத் தலைவர் எம்.எம்.கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா பொன்னுசாமி கலந்து கொண்டனர்.காரணை புதுச்சேரி ஊராட்சியில் 700 பேருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அனிதா இளவரசன் இலவச வேட்டி, சேலை, பொங்கல் பை வழங்கினார். |
காபி கொட்டியதால் தரையிறங்கியது விமானம் |
அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோ நகரில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு 255 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. கனடா வான் எல்லையில் பறக்கும்போது பைலட்டுக்கு காபி கொடுத்தார் பணிப்பெண். கு டிக்கும்போது காபி கப் நழுவி கீழே விழுந்தது. தகவல் தொடர்பு சாதனத்தில் காபி கொட்டிய தால் சிக்னல் தாறுமாறாக வந்தது. விமானம் கடத்தப்படும் சூழ்நிலையில் அனுப்பப்படும் சிக்னல்கூட வர ஆரம்பித்தது. இது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விமானத்தை அவசரமாக தரையிறக்க பைலட் முடிவு செய்தார். கனடாவின் டொரன்டோ விமான நிலையத்தில் விமானம் இறக்கப் பட்டது. பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் மீண்டும் சிகாகோ நகருக்கு அனுப்பப்ப ட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மறுநாள் பிராங்பர்ட் புறப்பட்டு சென்றனர். |
இளவரசர் வில்லியமுக்கு ஏப்ரல் 29ல் கல்யாணம் |
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (28) கேத் மிடில்டன் நிச்சயதார்த்தம் கென்யா வில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. திருமணம் வரும் ஏப்ரலில் நடக்கும் என தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் திருமண தேதியையும், நிகழ்ச்சி விவரத்தையும் அரண்மனை வட் டாரம் நேற்று முன்தினம் வெளியிட்டது. வில்லியம்&கேத் மிடில்டன் திருமணம் ஏப்ரல் 29&ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடக்கிறது. இவர்களுக்கு கேன்டர்பரி ஆர்ச் பிஷப் ரோவன் வில்லியம்ஸ் திருமணம் செய்து வைக்கிறார். திருமணம் நடக்கும் இடத்துக்கு கேத் மிடில்டன், குதிரை வீரர்கள் அணிவகுப்புடன் ஒயிட் ஹால், பார்லிமென்ட் சதுக்கம் வழியாக காரில் அழைத்து வரப்படுவார். திருமணம் முடிந்ததும் அதே பாதை வழியாக வில்லியம்&கேத் ஜோடியாக ஊர்வலம் வருவர். திருமணத்தை முன்னி ட்டு விருந்தினர்களுக்கு அரண்மனையில் இங்கிலாந்து ராணி சிறப்பு விருந்து அளிக்கிறார். அன் றைய தினம் இங்கிலாந்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
கல்லூரிக்கு செல்ல மகன் மறுத்ததால் விரக்தியில் பெற்றோர் தீக்குளிப்பு |
கல்லூரிக்கு செல்ல மகன் மறுத்ததால் விரக்தி அடைந்த பெற்றோர் இன்று அதிகாலை தீக்குளித்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (40). பிரபல கட்டிட கான்ட்ராக்டர். மனைவி செல்வி (38). இவர்களுக்கு சதீஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சதீஷை மரைன் இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்தனர். கடந்த 2 மாதமாக சதீஷ், கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கல்லூரிக்கு செல்லாவிட்டாலும் பரவாயில்லை, வேலைக்காவது சேர்த்து விடுகிறேன் என்று பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கும் சதீஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பெற்றோர் மனவேதனை அடைந்தனர்.இந்நிலையில் இன்று காலை தங்கவேல் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதைப்பார்த்து திடுக்கிட்ட செல்வியும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தம்பதியினரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே சதீஷ் வீட்டை பூட்டி விட்டு ஓடிவிட்டார். திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை பார்வையிட மாணவர்களுக்கு அனுமதி |
சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை வரும் 15&ம் தேதி பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்த இந்திய கப்பற்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம்தேதி இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கிந்திய கப்பற்படையை சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வரும் 15, 16ம் தேதிகளில் வர உள்ளது. அப்போது, கடலோர காவல் பணியில் கடற்படையின் பங்கு என்ன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வரும் 15ம்தேதி இங்கு வரும் கப்பல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பள்ளி, கல்லூரி நிறுவனத்தினர் ஐஎன்எஸ் அடையாறு, கப்பல் தளம், ராஜாஜி சாலை (நேப்பியர் பாலம் அருகில்) சென்னை09 என்ற முகவரியை வரும் 11ம்தேதிக்குள் அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு 25394240 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு ஆலோசனை கூட்டம் |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் பழவேற்காட்டில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மீஞ்சூர் நகர செயலாளர் பூபதி வரவேற்றார். துணை செயலாளர் ராமன், நிர்வாகிகள் சாந்தி, நேசமணி முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பழவேற்காடு முதல் பசியாவரம் வரை இணைப்பு மேம்பாலம் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
பனையூரில் திடீர் தீ விபத்து |
பனையூரில் நடந்த தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பலானது. குழந்தை அழுதபோது எழுந்ததால் குடிசை வாசிகள் உயிர் தப்பினர். சென்னை அடுத்த பனையூர் 1வது அவென்யூவில் கிஷோர் கார்டன் உள்ளது. இங்கு, 7 குடும்பத்தினர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். ஒரு வீட்டில் அம்ஜத்கான் என்பவர், மனைவி அலிமா மற்றும் 8 மாத கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென குழந்தையின் அழும் சத்தம் கேட்டு, அலிமா எழுந்தார். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அலிமா அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு எழுந்த அம்ஜத்கான், அலிமா மற்றும் குழந்தையுடன் வெளியே ஓடி வந்தார்.தீ மளமளவென அருகில் இருந்த இரண்டு குடிசைகளுக்கும் பரவியது. அம்ஜத்கான் ஓடிச்சென்று அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பினார். அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின் தீயை அணைக்க முற்பட்டனர். தகவல் அறிந்து திருவான்மியூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் 3 வீடுகளும் எரிந்து சாம்பலானது. வீடுகளில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார், எஸ்ஐ சார்லஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
மதுரை ஏர்போர்ட்டுக்கு 'சுங்க அந்தஸ்து' |
மதுரை விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையம், சர்வதேச தரத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள டெர்மினலில் செயல்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான போக்குவரத்து துவக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தற்போது பயணிகள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும், கொண்டு வரும் வீட்டு உபயோக பொருட்களுக்கு மட்டும், சுங்க வரி நடைமுறைகளை மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், பயணிகள் உடமைகளுடன், அனுமதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு வரவும், கொண்டு செல்லவும் முடியும்.இந்த அனுமதி வழங்கியதற்காக, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.அச்சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் கூறுகையில், ÔÔஇந்த அனுமதியால், சர்வதேச பயணிகள் விமானத்தை மதுரை விமான நிலையத்திலிருந்து இயக்க முடியும். மதுரை விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்யவும், பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் சரக்கு விமானங்களை இயக்க மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். |
அரசு பள்ளியில் நுழைந்து சமூக விரோதிகள் அட்டகாசம் |
வாலாஜாபாத்தில் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வாலாஜாபாத் தை சுற்றியுள்ள 15க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த 455 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதோடு, தரமான ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். இங்கு, பணியாற்றிய வாட்ச்மேன் பணி உயர்வு பெற்று, ஒரு ஆண்டுக்கு முன்பு வேறொரு பள்ளிக்கு மாற்றலாகி விட்டார். தற்போது வாட்ச்மேன் இல்லாததால், இரவில் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. வகுப்பறைகள் முன்பு அமர்ந்து மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை ஆங்காங்கே போடுகின்றனர். சில பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மதுபான பாட்டில்களை பார்த்து முகம் சுளிக்கும் நிலை உள்ளது. பள்ளி தொடர் விடுமுறை நாட்களில் இது போன்ற சம்பவம் அதிகம் நடக்கிறது. எனவே, அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தரராமன் கூறுகையில், ‘அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் முன்புறமும், பின் புறமும் கேட் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கேட்களை பூட்டிவிட்டுத்தான் செல்கிறோம். ஆனாலும் சமூக விரோதிகள் பள்ளிக்குள் எகிறிகுதித்து மது அருந்துகின்றனர். காலி பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து கல்வித்துறைக்கு தெரிவித்துள்ளோம். இந்த பள்ளிக்கு விரைவில் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும்’ என்றார். |
திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கத் தேர் குடையில் மாங்காய்கள் மட்டும் திருட்டு |
திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கத் தேரில் பொருத்தப்பட்டிருந்த, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க குடை திருட்டு போனதாக நேற்று காலையில் தேவஸ்தான அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் பிற்பகலில் தங்க குடையில் இருந்த சில மாங்காய்கள் மட்டுமே திருட்டு போனதாக அதிகாரிகள் அடித்த திடீர் பல்டி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருட்டு சம்பவம் பற்றி, தேவஸ்தான இணை செயல் அதிகாரி பாஸ்கர் நேற்று காலை கூறியதாவது, ‘கோயில் வளாகத்தின் முன்புறம், பெரிய ஜீயர்மடம் இருந்த இடத்தில் கட்டிடப்பணிகள் நடந்து வருகிறது. திருமலையில் பாதுகாப்பும், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் வாகன மண்டபத்தின் முள்வேலியை அகற்றிவிட்டு தங்கத்தேரில் பொருத்தியிருந்த தங்கக்குடையை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும்Õ என்றார்.பின்னர் பிற்பகலில், ‘தங்கக்குடை திருட்டு போகவில்லை. குடையை அலங்கரித்த தங்க மாங்காய்கள் மட்டுமே திருடு போனது‘ எ ன்று அவரும், மற்ற அதிகாரிகளும் தெரிவித்தனர். காலையில் குடை காணாமல் போனதாக புகார் செய்த அதிகாரிகள் மாலையில் மறுப்பு தெரிவித்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் 8 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. கடும் பாதுகாப்பை மீறி நடந்த திருட்டு சம்பவத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் அதிகாரிகள் அடித்த திடீர் பல்டியால், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
‘தனிதெலங்கானா’ வலியுறுத்தி ஆந்திராவில் மாணவர்கள் பந்த் |
ஆந்திராவில் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போலீசாரும், ராணுவத்தினரும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆந்திராவை பிரித்து தனித்தெலங்கானா அமைப்பது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.ஆனால், ‘ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையை ஏற்க முடியாது, ஐதராபாத்தை தலைநகராக கொண்ட தனித்தெலங்கானா மாநிலம் அமைவதே எங்களது ஒரே கோரிக்கை’ எனக்கூறி தெலங்கானா பகுதி மாணவர் கூட்டமைப்பினர் இன்று பந்த்துக்கு அழைப்பு விடு த்தனர். இதற்கு தெலங்கானா அரசியல் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி, நலகொண்டா, வாரங்கல், கம்மம், மகபூப் நகர், நிசாமாபாத் உள்ளிட்ட தெலங்கானா மாவட்டங்களில் உள்ள அனை த்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டன. மேலும், இன்று நடைபெற இருந்த சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.இதனிடையே தெலங்கானாவுக்கு ஆதரவாக ஸ்ரீகிருஷ்ணா சிபாரிசு செய்யவில்லை எனக்கூறி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது நேற்று கற்களை வீசினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து போலீசார், ரப்பர் தோட்டாக்களால் 15 ரவுண்ட்கள் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை கலைத்தனர். இந்த மோதலில் 24 போலீசார் மற்றும் 5 மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர் ரவிக்குமார் என் பவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரை காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், அரசு பஸ்களுக்கு ஒரு கும்பல் நேற்று தீ வைத்தது. இதில் 2 பஸ்கள் எலும்புக் கூடாகின. தெலங்கானா மாவட்டத் தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ராணுவம் மற்றும் போலீசார் விடியவிடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பந்த் காரணமாக ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலு ங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரது வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல் பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் நடிகர் சிரஞ்சீவி, டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகரராவின் வீடு மற்றும் சினிமா நடிகர், நடிகைகள், அனைத்து அரசியல் பிரமுகர்கள், அனைத்து எம்பி, எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது. தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி டிஆர்எஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெலங்கானா மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவற்றின் எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலம் முழு வதும் பதற்றம் நிலவுகிறது. |
‘பீட்டா’ பிரசார பீரங்கி பமீலா நம்பர் ஒன் |
விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக பிரசாரம் செய்ததில் ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் பமீலா ஆண்டர்சன் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக ‘பீட்டா’ அமைப்பு கூறியுள்ளது.ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் (43). பேவாட்ச் சீரியல் மற்றும் ஏராளமான படங்களில் நடித்தவர். பிளேபாய் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி போஸ் கொடுத்து வருபவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு 3 நாள் சம்பளமாக ரூ.2.5 கோடி வாங்கியவர்.விலங்குகள் நலனுக்காக கடந்த சில ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான ‘பீட்டா’வுக்காக பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். நிர்வாண போஸ்களும் கொடுத்திருக்கிறார்.சமீபத்தில் அவரை வைத்து ஒரு பிரசார விளம்பரத்தை பீட்டா தயாரித்தது. ‘க்ரூயல்ட்டி டஸ்ட் நாட் ஃபிளை’ என்பது விளம்பர படத்தின் பெயர். விமான நிலைய செக்யூரிட்டி கெட்டப்பில் இருப்பார் பமீலா. விலங்குகளின் தோல் மற்றும் உரோம ஆடைகளை அணிந்து வருபவர்களின் ஆடையை அவர் அவிழ்த்து விடுவார். ‘விலங்குகளை கொடுமைப்படுத்துபவர்கள் விமான பயணம் செய்ய அனுமதியில்லை’ என்று வாசகத்துடன் விளம்பரம் முடியும்.விலங்குகள் பாதுகாப்புக்காக பமீலா செய்துவரும் சேவையை பாராட்டி இந்த ஆண்டின் சூப்பர் நபர் என்று அறிவித்து கவுரவித்திருக்கிறது பீட்டா. |
மாத்திரையை உடைச்சு சாப்பிடுறது ரிஸ்க் |
இதய, நரம்பு கோளாறுகளுக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் உடைத்து சாப்பிடுவது ரிஸ்க் என்று பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.சளி, இருமல், உடல் வலி, தலைவலி கொஞ்சமாக இருந்தால் அரை மாத்திரை போதும் என்பார் டாக்டர். இது மட்டுமல்லாமல் பெரிய மாத்திரையாக இருந்தால் விழுங்க சிரமப்பட்டு இரண்டாக உடைத்து சாப்பிடுவார்கள். இது சரியா என்பது குறித்து பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வெவ்வேறு அளவுகளில் மாத்திரையை அவர்கள் உடைத்து சாப்பிட்டனர். அவர்களிடம் பின்னர் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:உடைப்பதற்கு கத்தியை பயன்படுத்தும்போது சில நேரங்களில் மாத்திரை சிதறிவிடுகிறது. இதுபோன்ற சூழலில் நமக்கு தேவையான அளவுக்கு தனிமங்கள் கிடைக்காமல் போய்விடும். சாதாரண வலி, இருமல் என்றால் பரவாயில்லை. ஆனால் இதய பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு போன்றவற்றுக்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மாத்திரை தனிமங்கள் கூடக் குறைய எடுத்துக் கொள்வது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம். குறைந்த மில்லிகிராம் அளவு மாத்திரைகளை முழுதாக பயன்படுத்துவதே நல்லது.இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். |
‘வழுக்கை’க்கு இனி வாழ்க்கை |
நீண்ட நெடுங்காலமாக தீர்வு காணப்படாத பிரச்னைகளில் ஒன்று வழுக்கை தலை. உலகம் முழுவதும் இதன் ஆதிக்கம் அதிகம். இதில் ஆண் வர்க்கம் பெரும்பான்மை. வழுக்கையால் சிலருக்கு வாழ்க்கையே சூனியமாகிவிடுவதுண்டு. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண பணத்தை தண்ணீராக செலவழிப்பவர்களும் உண்டு. இனி, வழுக்கையர்கள் வருத்தப்பட தேவையில்லை. அவர்களின் பிரச்னையை தீர்க்கவே பெரும் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. வழுக்கை தலையில் முடி வளரச் செய்ய முடியும் என்று கிடைத்த ஆய்வு முடிவு, கோடானுகோடி ஆண்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்கள்:பெரும்பாலும் தீர்வு காணப்படாத வழுக்கை பிரச்னைக்கு தற்போதைய ஆய்வு நிரந்தர தீர்வு காண வழி வகுத்துள்ளது. இந்த முயற்சி வெற்றியும் பெற்றுள்ளது. தலையில் உள்ள பாலிக்கிள் செல்களை உசுப்பி விட்டால் வழுக்கையில் மீண்டும் இயற்கையாகவே முடி முளைப்பது சாத்தியம் என்பதை ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. தலையில் தோலின் அடியில் முடி வளர்வதற்கு காரணமாக ஏராளமான செல்கள் இருக்கின்றன. இவை ஆரோக்கியம் குறைந்து காணப்படுவதே முடி உதிர்தலுக்கும் மீண்டும் வளராததற்கும் காரணமாகிறது. இதை கண்டறிந்து உரிய முறையில் சிகிச்சை அளித்து தூண்டிவிட்டால், செல்கள் மீண்டும் ஆரோக்கியம் பெறும் முடி வளர வகை செய்யும். முடி வளர்வதற்கு ஏதுவாக உள்ள ஜீன்கள் மற்றும் பாலிக்கிள் செல்களை தூண்டுவதன் மூலம் இது சாத்தியமாகிறது.ஆராய்ச்சிக்காக எலிகளை வைத்து பரிசோதிக்கப்பட்டதில் இந்த முறையில் முடி வளரச்செய்வது சாத்தியம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மனிதர்களிடமும் இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கிடைத்துள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு காத்திருக்கும் இந்த புதிய முறையால் உலகம் முழுவதும் வழுக்கை தலைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் என்பது உறுதி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். |
ஹைதி முகாமில் அதிகரிக்கிறது பலாத்காரம் |
ஹைதி தீவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர், 3 லட்சம் பேர் காயம் அடைந்தனர். பூகம்பம் ஏற்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்னும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். இங்கு தங்கியுள்ள பெண்கள் பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் ஆயுதங்களுடன் சுற்றும் கும்பல் முகாம்களுக்குள் புகுந்து அங்குள்ள பெண்களை, அவர்களின் குழந்தைகளின் கண் எதிரே பலாத்காரம் செய்கின்றனர். தற்காலிக முகாம் அமைக்கப்பட்ட முதல் 5 மாதத்துக்குள்ளாகவே 250க்கும் அதிகமான பலாத்கார புகார்கள் கூறப்பட்டன. இச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முகாமில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். |
பென்ஷன் பணத்துக்காக பாட்டியை 3 ஆண்டு சிறைவைத்தார் பெண் |
ஜெர்மனியை சேர்ந்த பெண் இன்ஜினியர் இரிஸ் எடில்மான் (49). இவரது பாட்டி எல்சா கோயினிக்(96). பேத்தியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். பாட்டி தன்னுடன் வசிப்பது இரிஸ்க்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் தனது வீட்டுக்கு அருகில், குறைந்த வாடகையில் ஒற்றை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பாட்டியை தங்க வைத்திருந்தார். உணவு மட்டும் கொடுத்துவிட்டு வீட்டை பூட்டிவிடுவார் இரிஸ். தனிமையில் வசித்து வந்த பாட்டி சில சமயங்களில் சத்தம் போட்டுள்ளார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அந்த வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மூதாட்டி ஒருவர் இருட்டறையில், சுகாதாரம் அற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாட்டியை தனி அறையில் அடைத்து வைத்ததற்காக பேத்தி இரிஸ் மீது வழக்கு தொடர்ந்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது. பாட்டி எல்சா கடந்த ஆண்டு மே மாதம் இறந்துவிட்டார். இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை தற்போது நடந்து வருகிறது. பாட்டி எல்சாவுக்கு மாதம் 600 யூரோ (ரூ.36 ஆயிரம்) பென்ஷன் வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதை இரிஸ் பெற்றுக்கொண்டு, பாட்டி எல்சாவை சரியாக கவனிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரிஸ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.