category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
கடன் திருப்பித் தராத ஆசிரியர்களை கண்டித்து தற்கொலைக்கு அனுமதி கோரி முதியவர் மனு
நாமக்கல்: 'கடனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவரும், ஆசிரியர் தம்பதிகளை கண்டித்து, தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, என்.புதுப்பட்டியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அன்பு சார்லஸ், 65, திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.அதன் விபரம்: நாமக்கல் மாவட்டம், ஒக்கிலிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர் பிரவீணா, மல்லசமுத்திரம் ஒன்றியம், பள்ளக்குழி ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வீரமணி. இருவரும் கணவன், மனைவி. இருவரும், 'நாங்கள் ஆசிரியர்கள்; நேர்மையாக நடந்து கொள்வோம்' எனக்கூறி, பலரிடம் கடன் வாங்கி, மோசடி செய்துள்ளனர். என்னிடமும், மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். பணத்தை, திருப்பி தராமல் ஏமாற்ற முயற்சித்தனர். பலபோராட்டங்களுக்கு பின், ஒரு பகுதியை கொடுத்தனர். ஆனால், முழுமையாக தராமல், எனக்கு மனஉளைச்சலையும், மனரீதியாக துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டுகின்றனர். உடல்நலம் குறைவு காரணமாக, மருந்து வாங்குவதற்கு பணம் இல்லாமல் உள்ளேன். அவர்களை கண்டித்து, ஒக்கிலிப்பட்டி துவக்கப்பள்ளி அல்லது பள்ளக்குழி நடுநிலைப்பள்ளி முன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள கருணை அடிப்படையில் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது: இது தொடர்பாக என்னை சந்தித்து பலமுறை புகார் தெரிவித்தார். நானும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்தவிடும்படி, ஆசிரியர்கள் வீரமணி, பிரவீணாவிடம் தெரிவித்து, எச்சரிக்கையும் விடுத்துள்ளேன். தந்துவிடுவதாக கூறினர். நாளை (இன்று), இருவரையும் அழைத்து, வாங்கிய கடன் முழுவதையும் திரும்ப கொடுக்கும்படி அறிவுறுத்த உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகம்
மாயமான பள்ளி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு
நாமக்கல்: மாயமான பள்ளி மாணவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். நாமக்கல் அடுத்த, கருப்பட்டிப்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், செந்தாமரை தம்பதியரின் மகன் மணிகண்டன், 16, நாமக்கல் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல், காலையில் வெளியே சென்ற மணிகண்டன், இரவு வரை திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் மகனின் நண்பர்கள் வீடுகளில் தேடினர். எங்கும் காணவில்லை. அதையடுத்து, வாட்ஸ் ஆப் குரூப்பில், மாணவரின் புகைப் படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டனர். ஆனால், எவ்வித பதிலும் வரவில்லை. இந்நிலையில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையம் மயானம் அருகே உள்ள கிணற்றில், சிறுவன் ஒருவன் சடலமாக கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த கிணற்றை யாரும் பயன்படுத்துவதில்லை. நீச்சல் பழகுவதற்காக வந்து தவறி இறந்தாரா அல்லது நீச்சல் பழகுவதற்காக வந்த மாணவர் கிணற்றில் இறங்கியபோது கொலை செய்யப்பட்டாரா என, பல்வேறு கோணத்தில் நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
மாணவியரிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளியை பெற்றோர் முற்றுகை
திருச்செங்கோடு: மாணவியரிடம், ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக கூறி, திருச்செங்கோடு, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியான, கலைமகள் கல்வி நிலையம் உள்ளது. இங்கு, எட்டாம் வகுப்பு படிக்கும், மூன்று மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் ஆசிரியர் சந்திரசேகர் மீது, மாணவியர் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல், ஆசிரியை சோபனா, மாணவ, மாணவியரை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், உணவு வாங்கி வர சொல்வதாகவும், தான் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவியரை சுத்தம் செய்ய சொல்வதாகவும் புகார் எழுந்தது. ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாக அலுவலர் சந்திரா, வட்டார கல்வி அலுவலர்கள் மாதவன், உதயகுமார், திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் ஆகியோர் விசாரித்தனர். 'ஆசிரியர் மீது தவறு இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழகம்
கோகுல்ராஜ் தோழி பிறழ் சாட்சி விசாரணை: 22க்கு ஒத்தி வைப்பு
நாமக்கல்: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ், 23. அவரது கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை, நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், இதுவரை, கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், தோழி சுவாதி உள்பட, 50க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இதற்கிடையில், கோகுல்ராஜின் கல்லூரி தோழி சுவாதி, அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்த நிலையில், அவர் பிறழ் சாட்சி அளித்ததால், சி.பி.சி.ஐ.டி., போலீசார், நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, மாஜிஸ்திரேட் வடிவேல் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதி நேரில் ஆஜராகவில்லை. அதையடுத்து, வரும், 22க்கு விசாரணையை ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தமிழகம்
கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, கள்ளக்காதலியை கொன்று, காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த அரளிபள்ளத்தை சேர்ந்தவர் அம்சா, 40. அவரது கணவர் மணி இறந்துவிட்டார். ராஜ்குமார், 22, என்ற மகனும், ராஜேஸ்வரி, 21, என்ற மகளும் உள்ளனர். ராஜேஸ்வரிக்கு, எருமப்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவருடன் திருமணமாகி விட்டது. கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி, அம்சா சமையல் வேலை செய்து வந்தார். ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக, கடந்த, 8ல், எருமப்பட்டி வந்த அம்சா, மறுநாள் வருவதாக கூறி தன் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால், தாய் வராததால், மதியம், 12:00 மணியளவில், பாலசுப்ரமணியை, அம்சா அனுப்பியுள்ளார். அங்கு சென்றபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்தவர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அம்சா சடலமாக கிடந்தார். அருகில், வாலிபர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கினார். எருமப்பட்டி போலீசார் விசாரித்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: கோவையில் பணியாற்றியபோது அம்சாவுக்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய கோவை குனியமுத்தூர் மதுரைவீரன் தெருவை சேர்ந்த பிரகாஷ், 28, என்பவருக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், கோவையில் இருந்து அரளிபள்ளத்துக்கு வந்துள்ளனர். அன்று இரவு, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில், அம்சாவை அடித்து கொலை செய்த பிரகாஷ், தானும் தற்கொலை செய்து கொண்டார் இவ்வாறு அவர் கூறினார். சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தமிழகம்
15 நாட்களாக பூட்டப்பட்டுள்ள 'அம்மா' குடிநீர் விற்பனை மையம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அம்மா குடிநீர் விற்பனை மையம், 15 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது. குமாரபாளையம், பஸ் ஸ்டாண்டில், 'அம்மா' குடிநீர் விற்பனை மையம் செயல்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு உபயோகமாக இருந்தது. இந்நிலையில், கடந்த, 15 நாட்களாக, விற்பனை மையம் பூட்டப்பட்டுள்ளது. கடும் கோடை மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்கள், பயணிகள் கூடுதல் விலை கொடுத்து, தனியார் குடிநீர் பாட்டில்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தனியார் குடிநீர் பாட்டில்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டதா என, மக்கள் மத்தியில் ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 'மீண்டும் அம்மா குடிநீர் விற்பனையை தொடங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம்
தேர்தலை புறக்கணிக்க முடிவு: வி.ஏ.ஓ.,விடம் மக்கள் மனு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஒன்றியம், அணிமூரில், திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இதை அகற்றக் கோரி, பல முறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், அப்பகுதியில் உள்ள, 1,200 வாக்காளர்களும், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, வி.ஏ.ஓ., வரதராஜனிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: படிப்படியாக குப்பையை அகற்றி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், ஓராண்டுக்குள் குப்பையை அகற்றி விடுவதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். ஏழு இடங்களில், மட்கும் குப்பையை உரமாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இரு குப்பை லாரி, ஆறு ஆட்டோ, பேட்டரியில் இயங்கும், 38 வண்டிகள், 120 தள்ளுவண்டிகள் மூலம் குப்பை பெறப்படுவதாகவும், முதற்கட்டமாக, நகராட்சி அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் குப்பையை பிரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டவுடன், அணிமூருக்கு குப்பை கொண்டு செல்வது படிப்படியாக குறைக்கப்பட்டு, முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழகம்
புகார் பெட்டி - கரூர்
தெருவிளக்குகள் இல்லாமல் சிரமம்: கரூர் அருகே உள்ள வாங்கலில், விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இப்பகுதி வழியாக செல்லும் சாலையில், பல இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. அவற்றில் தெருவிளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், வாங்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தெருக்களில் தெருவிளக்கு வசதி இல்லை. பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.- பி.சக்திவேல், வாங்கல்.மண் சாலை தார்ச்சாலையாக்கப்படுமா? கரூர் அருகே, கட்டளை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், குக்கிராமங்கள் அதிகம் உள்ளன. அதில் பெரும்பாலான கிராமங்களில் தார்ச்சாலை வசதி கிடையாது. மண் சாலைகள் தான் உள்ளன. தார்ச்சாலை உள்ள இடங்களில், குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாகனங்களில் மட்டுமல்ல, நடந்து கூட செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தார்ச்சாலை வசதி செய்ய வேண்டும்.- எ.மலர் மன்னன், கட்டளை.
தமிழகம்
ரெத்தினகிரீஸ்வரர் கோவில் திருவிழா
குளித்தலை: அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா இன்று துவங்குகிறது. தேர்தல் அன்று, தேரோட்டம் நடக்கிறது. குளித்தலை அடுத்த அய்யர்மலையில், பிரசித்தி பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா, இன்று தொடங்கி, 23 வரை நடக்கிறது. காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், திருவிழா துவங்கியபின், சுவாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்து, இரவில் பல்லக்கு ஊர்வலம் நடக்கும். வரும், 18ல், தேர்தல் அன்று காலை தேரோட்டம் நடக்கவுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்பர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தமிழகம்
வேன் மோதி பெண் பலி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் குல்சார் பேகம், 54, இவர் கணவர் ஹைதர் அலி, திருச்சி வழித்தடத்தில் தனியார் பஸ் ஓட்டுனராக பணியாற்றுகிறார். நேற்று காலை, 5:00 மணியளவில், தண்ணீர்பாலம் சாலையை கடந்து, பஸ் ஓட்டி வந்த கணவரிடம் டிபன் கேரியர் வாங்கிக் கொண்டு திரும்பும்போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற பொலிரோ பிக்கப் வேன், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குல்சார் பேகம் அதே இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து, மாயனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
தெருவிளக்குகள் பழுதானதால் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், பழுதான தெருவிளக்கு மாற்றப்படாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து உட்பட்ட லாலாப்பேட்டை மரப்பட்டறை தெருவில், ஐந்து தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பழுதாகி பல மாதங்களாக மாற்றப்படாமல் உள்ளன. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இரவில் கும்மிருட்டில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். பழுதான தெருவிளக்குகளை மாற்ற வேண்டும்.
தமிழகம்
முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
கரூர்: தான்தோன்றிமலை முத்து மாரியம்மன் பூக்குழி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் அருகே, தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அதில், ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடக்கிறது. நடப்பாண்டில், கடந்த மார்ச், 31ல் கரகம் பாலித்தலோடு விழா துவங்கியது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத் தில் அம்மன் திருவீதி உலா, மண்டகப்படி நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம் காலை தேரோட்டமும் நடந்தது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. அதில், பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். பிறகு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்திக்கொண்டு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
தமிழகம்
'ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் அவசியம்'
கரூர்: 'ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில், அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் பேசியதாவது: ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுச்சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு, எந்தவித இடர்பாடுகளும் இல்லாத வகையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். வெயில் காலம் என்பதால், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் தேவையான அளவு குடிநீர் இருக்கின்றதா, என்பதை நகராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். ஓட்டுப்போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் வெயிலில் நிற்காத வகையில் தேவைப்படும் இடங்களில் ஷாமியானா பந்தல் அமைக்கலாம். வாக்காளர்கள் அமர, கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைக்கலாம். தேவையான அளவு சர்க்கரை உப்புக் கரைசல்கள், முதலுதவிக்கான மருந்துகளை இருப்பில் வைக்க, சுகாதாரத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களுக்காக, சாய் தளப்பாதை அமைக்கப்பட்டிருக்கின்றதா என்பதை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளை ஓட்டுச்சாவடிக்குள் சக்கர நாற்காலியில் அழைத்துவர, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டுப்போடத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம்
மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
கிருஷ்ணராயபுரம்: மின்மோட்டார் பழுது சரிசெய்யப்படாததால், லாலாப்பேட்டையில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, மேற்கு கடைவீதியில், சின்டெக்ஸ் தொட்டி வைத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்ற மாதம், இத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின் மோட்டார் பழுதாகி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதிவாசிகள், மிகவும் அவதிப்படுகின்றனர். மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும்.
தமிழகம்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தோகைமலை யூனியன் அலுவலகம் முற்றுகை
குளித்தலை: குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கப்படாததால், பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள், தோகைமலை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.குளித்தலை அடுத்த, கூடலூர் பஞ்., புரக்கிளாம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ஆழ்துளை குழாய் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த நான்கு மாதங்களாக, இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கூடலூர் பஞ்., செயலாளர் நேசமணியிடம், பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை. யூனியன் ஏ.பி.டி.ஓ., ராணியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் வேதனையில் இருந்தனர். அருகிலுள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் எடுத்து, பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கிணற்றின் உரிமையாளர், 'விவசாயத்திற்கு பற்றாக்குறையாக உள்ளதால், தண்ணீர் எடுக்க வேண்டாம்' என, நேற்று தண்ணீர் பிடிக்க வந்தவர்களை தடுத்துள்ளார். இதையடுத்து, காலி குடங்களுடன் தோகைமலை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் மேலாளர் ருக்மணி, பொறியாளர் செல்வி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, 'காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள், 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது. ஓரிரு மாதங்களில் குடிநீர் வினியோகம் சீராகும். அதுவரை, டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும்' என, அவர்களை சமாதானம் செய்தனர். அதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தமிழகம்
இருப்பு பாதையில் நடந்து செல்லும் பயணிகள்
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் இருப்புப்பாதையை அபாயகரமான முறையில் கடந்து செல்கின்றனர். கரூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, பிளாட்பாரங்களுக்கு செல்ல நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் மேம்பாலத்தில் செல்லாமல், இருப்புப் பாதையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இதை ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக்கு உள்ள போலீசாரும் கண்டுகொள்வதில்லை. அசம்பாவிதம் நேரும் முன், பயணிகள் இருப்புப் பாதை வழியாக கடந்து செல்ல தடை விதிக்க வேண்டும்.
தமிழகம்
சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்; சுற்றுலா பயணிகள் அச்சம்
கரூர்: நெரூரில், பூங்காவை சுற்றி, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை, மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் அருகே நெரூரில், பிரசித்தி பெற்ற சதாசிவபிரமேந்திராள் அதிஷ்டானம் உள்ளது. பயணிகள் வசதிக்காக, இங்குள்ள காவிரியாற்றங்கரையில், சுற்றுலா துறை சார்பில், பூங்கா வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பல மின்கம்பங்கள் சேதமாகி, சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பீதியில் உள்ளனர். பூங்கா அருகே, விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும்.
தமிழகம்
சிக்னல் செயல்படாததால் விபத்து அதிகரிப்பு
கரூர்: மண்மங்கலத்தில், சிக்னல் விளக்கு பழுதானதால், விபத்து அதிகரித்துள்ளது. கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சிக்னல் விளக்குள் பொருத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில், வாகன நெரிசல் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சிக்னல் விளக்குகள் பழுதாகி இயங்காமல் உள்ளன. அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், அப்பகுதியில், மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அவ்வழியாக செல்லும் மணல் லாரிகளால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பழுதான சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
தமிழகம்
அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்
வேகத்தடை இல்லாததால் சிரமம்: அரவக்குறிச்சியிலிருந்து, தாராபுரம் செல்லும் சாலையில், பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதன் அருகே சாலையில் வேகத்தடை போடப்படவில்லை. பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்லும் வழியில், பஸ்கள் திடீரென திரும்புவதால், எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு வேகத்தடை அமைத்தால், இப்பிரச்னை தீரும். அதன் அருகே, வேகத்தடை இருப்பது குறித்து, எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டும்.தோண்டிய பள்ளம் மூடப்படுமா? அரவக்குறிச்சி புறவழிச்சாலை பகுதியில் உள்ள, எட்டியாக்கவுண்டனூர் சாலை, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின், சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அதன்பின், அவ்வழியாக பூமிக்குள் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சீரமைப்பதற்காக சாலையில் திரும்ப பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், இரவில் அவ்வழியே செல்வோர், பள்ளத்தில் விழுகின்றனர்.பழைய போர்டை புதுப்பிக்க வேண்டும்: அரவக்குறிச்சியிலிருந்து, பள்ளப்பட்டி செல்லும் சாலையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளது. இதன் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சேதமடைந்த நிலையில் உள்ளது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பலகை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், புதிதாக அலுவலகத்திற்கு வரும் மக்கள், அலுவலகம் இருக்கும் இடம் சரியாக தெரியாமல், அக்கம் பக்கம் விசாரித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. அங்கு புதிய போர்டு வைக்க வேண்டும்.வால்வு பழுது; குடிநீர் வீண்: அரவக்குறிச்சி ஈஸ்வரன் கோவில் அருகே, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பள்ளப்பட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பைப் லைன் செல்கிறது. இதில், இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேட் வால்வு பழுதாகி பல நாட்கள் ஆகின்றன. பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலன் இல்லை. உடைந்த கேட் வால் விலிருந்து, தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகிறது. கோடைகாலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை வீணாக்காமல் தடுக்க வேண்டும்.தெருவோரத்தில் குப்பை குவிப்பு: அரவக்குறிச்சியில் தர்க்கா தெரு, பூச்சான் கிணறு உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் குப்பை குவிந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே, இப்பகுதியில் குப்பை அள்ளும் பணி நடக்கவில்லை. தினமும் அப்புறப்படுத்தாததால், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. சாலையில், வாகனங்களில் செல்பவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். குப்பையை தினமும் அள்ளி அப்புறப்படுத்த வேண்டும். மேலும், இப்பகுதியில் போதுமான குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்.
தமிழகம்
அரவக்குறிச்சி தொகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
கரூர்: வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடக்க உள்ள, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலை மாறுமா என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய சட்டசபை தொகுதியாக அரவக்குறிச்சி உள்ளது. முருங்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே வாக்காளர்கள் நம்பியிருக்கும் இந்த தொகுதியில், மாநகராட்சி, நகராட்சிகள் இல்லை. ஐந்து டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் அதிகப் படியான கிராம பஞ்சாயத்துக்கள்தான் இத்தொகுதியில் உள்ளன. அரவக்குறிச்சியில், முருங்கைக்காயை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு, முருங்கை பவுடர் உற்பத்தி மையம் அமைத்தல் போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படவில்லை. மேலும், அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், இடவசதியுடைய பஸ் ஸ்டாண்ட் கூட, அரவக்குறிச்சியில் இல்லை. சின்னதாராபுரம் தாலுகா, துவக்கும் பணிகள் கிடப்பில் உள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில் ஓடும் நங்காஞ்சி ஆறு, ஆக்கிரமிப்பிலும், புதர் மண்டியும் உள்ளது. பல கிராமப்பகுதிகளில் தரமான சாலை இல்லை. பல கிராமங்களுக்கு முழுமையான பஸ் போக்குவரத்து இல்லை. குடிநீருக்கு, பெரும்பாலும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டி உள்ளது. திருப்பூரில் இருந்து வரும் சாயக்கழிவு பிரச்னை தீராமல் உள்ளது. ஒரு சில பஞ்சாயத்துகளுக்கு மட்டும், காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் வேலாயுதம்பாளையத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தரமான அரசு மருத்துவமனைகள் இல்லை. இதனால், அரவக்குறிச்சியை சேர்ந்த, அவசர கால நோயாளிகள் கரூர், மதுரை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில், காகித ஆலை, சிமென்ட் ஆலை, தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஆனால், தொகுதி முழுக்க பெரிய அளவில் வளர்ச்சி இல்லை. தொழிற்சாலைகள் உள்ள காகிதபுரம், புகளூர் பகுதியில் இன்னும், சாலையோரத்தில் தான் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிள்ள, அரவக்குறிச்சி தொகுதியில் வரும் மே மாதம், 19ல் நடக்க உள்ள தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிப்பார்களா? வெற்றி பெறுபவர்கள் அதை நிறைவேற்றுவார்களா என, அப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம்
பகவதியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி ஊர்வலம்
குளித்தலை: பகவதியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர். குளித்தலை அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பகவதியம்மன்கோவில் திருவிழா கடந்த, 5ல், முகூர்த்த கால் ஊன்றுதலுடன் துவங்கியது. 7 இரவு கரகம் பாலித்தல், தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம், பால் குடம், தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது, அலகு குத்தி, அக்னிச்சட்டி ஏந்தி வந்து பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஊர்வலம் பிரதான வீதிகள் வழியாக சென்று, கோவில் வந்தடைந்தது. நேற்று எருமை கிடாய் வெட்டுதல், இரவு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை விமரிசையாக நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா முடிவடைகிறது.
தமிழகம்
தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றியது அ.தி.மு.க., ஆட்சி: அமைச்சர் தகவல்
கரூர்: கரூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மத்தியில் வலிமையான ஆட்சி வேண்டும் என்றால், மோடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். தி.மு.க., ஆட்சியில் தான், 12 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அதன் பிறகு வந்த முன்னாள் முதல்வர் ஆட்சியின்போது, மின் மிகை மாநிலமாக மாற்றி காட்டினார். அதனால் தான் தற்பொழுது 1,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்து வைத்திருக்கிறோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏழை குடும்பம், நடுத்தர குடும்பங்கள் அனைவருக்கும், 100 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் கிடையாது. இதனால், ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். ஒரு சில கட்சிகள், கிராம சபைகூட்டம் நடத்தி, கிராமங்களுக்கு சென்று மனுக்களை பெற்று வந்தனர். அதனால், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்கின்றனர். இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, கரூர் ஒன்றியம் நெரூர், சோமூர், அச்சமாபுரம், ஒத்தக்கடை, வேடிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, அரசுகாலணி, அருகம்பாளையம், தங்கநகர், வெண்ணைமலைபட்டி, வாங்கப்பாளையம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில், கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
சொந்த கட்சி போட்டியிடும் தொகுதிக்கு கூட்டணி கட்சியினர் ஓட்டம்: அ.தி.மு.க., புலம்பல்
கரூர்: கூட்டணி கட்சி நிர்வாகிகள், சொந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய சென்றுவிடுவதால், அ.தி.மு.க.,வினர் தன்னந்தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்துக்கு அருகில் உள்ள, திருச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், திண்டுக்கல் தொகுதி, பா.ம.க.,வுக்கும், கோவை, பா.ஜ., கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கரூர் தொகுதியில், அ.தி.மு.க., கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை போட்டியிடுகிறார். கரூர் லோக்சபா தொகுதியில், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் பகுதிகளும் உள்ளதால், இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்ற மூன்று மாவட்டங்களுக்கும் பிரசாரத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பா.ம.க., - தே.மு.தி.க., - பா.ஜ., நிர்வாகிகள் சொந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். தம்பிதுரை, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்யும் போது மட்டும் உடன் வருகின்றனர். மற்ற நேரங்களில் யாரும் வருவதில்லை. குறிப்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் பகுதியில் தம்பிதுரைக்காக பிரசாரம் செய்தபோது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் செல்லவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட தினகரனின், அ.ம.மு.க., கட்சி, ஓட்டைப் பிரிக்கும் என்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளைத்தான் தம்பிதுரை நம்பியுள்ளார். ஆனால், அவர்களோ தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்ய சென்று விடுகின்றனர். தம்பிதுரையும் மற்ற மாவட்டங்களுக்கு சென்றுவிடும் நிலையில், அ.தி.மு.க.,வினர் வார்டு வார்டாக இரவு, 10:00 மணி வரை பிரசாரம் செய்கின்றனர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வராததால், தம்பி துரைக்கு சிக்கல்தான் என, அ.தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.
இந்தியா
ரபேல் ஆவணம் குறித்து விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் குறித்த ஆவணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகம்
சொட்டுத் தண்ணீர் கூட வீணாகக் கூடாது: முதல்வர்
திருச்சி : திருச்சி அருகே முசிறியில் தேர்தல் பிரசாரத்தில் பெரம்பலுார் அ.தி.மு.க., வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், காவிரி -கோதாவரி திட்டத்திற்குத்தான் முதல் குரல் எழுப்புவார்கள் . நதிகள் இணைப்புத் திட்டம் வந்தே தீரவேண்டும். காவிரி ஆற்றில் எத்தனை தடுப்பணைகள் கட்டமுடியுமோ அத்தனை தடுப்பணைகள் கட்டப்படும். ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு என பேசினார்.
இந்தியா
லாலு பிரசாத் ஜாமின் மனு தள்ளுபடி
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான பல வழக்குகளில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்திற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வழக்கில் ஜாமின் கேட்டு லாலு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகம்
நெருங்கும் வெற்றி: தமிழிசை
தூத்துக்குடி : பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உப்பளத் தொழிலாளர்களிடம் ஓட்டுகேட்டார். அப்போது தொழிலாளர்கள் அவருக்கு அன்புடன் உப்பு பாக்கெட்டுகளை பரிசாக வழங்கினர்.
தமிழகம்
ஒரு நொடியில் ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்
துாத்துக்குடி : தி.மு.க.,வேட்பாளராக துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ''இங்கு போட்டியிடும் கனிமொழி, பார்லிமென்ட் விவாதத்தில் 'பெண் புலி' என்று அழைக்கப்படுபவர். இவரை விட துாத்துக்குடிக்கு சிறந்த வேட்பாளர் வேறு ஒருவர் இருக்க முடியாது. எனது தங்கைக்கு வாக்களியுங்கள். அவர் ஒரு சமூகப் போராளியாக வளர்ந்திருக்கிறார். பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியவர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட ஒரு மாதம் அல்ல, ஒரு மணி நேரம் அல்ல, ஒரே நிமிடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது,'' என்றார்.
தமிழகம்
கன்னியாகுமரியில் பா.ஜ, வெற்றி உறுதி: பொன்.ராதா
நாகர்கோவில்: தான் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ., வெற்றி உறுதி என்று பா.ஜ., மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறுகையில், ''எல்லாவற்றுக்கும் பா.ஜ.வை குறைகூறுவது அர்த்தமற்றது. 4 தொகுதி தேர்தலை, தேர்தல் ஆணையம் தான் முடிவெடுத்து அறிவிக்கிறது. ஸ்டாலின் தூங்காமல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்றிருந்தால், நடந்து வரும் சாலை பணிகளை பார்த்திருப்பார். கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எம்.மாணியின் மறைவுக்கு இதய அஞ்சலி. எல்லாவற்றையும் இடம் மாற்றி வைத்துவிட்டு, மணமகளே மணமகளே வா என்று ப.சிதம்பரம் அழைக்கிறார்,'' என்று அவர் தெரிவித்தார்.
தமிழகம்
எட்டு வழியில் ஏழரை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசினார் முதல்வர் பழனிசாமி. 'தேர்தல் களம் எப்படி இருக்கு?'. 'சாதகமா இல்லய்யா... நிறைய வேலை பாக்கணும்'. 'என்ன செய்யணும்னு லிஸ்ட் கொடுங்க... நான் பாத்துக்கறேன்'.
இந்தியா
பிரதமர் மோடி ஏப்.,26ல் வேட்புமனு
புதுடில்லி: வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வரும் 26 அன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முதல் நாள் ஏப்.,25 அன்று சாலை வழியாக பேரணி மூலம் பிரசாரம் செய்கிறார். பிரதமர் பேரணியில் பா.ஜ., மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா
ராபர்ட் வாத்ரா பிரசாரம் பா.ஜ.,வுக்கு சாதகம்
அமேதி : அமேதி தொகுதியில் ராபர்ட் வாத்ரா செய்யும் பிரசாரம் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
தமிழகம்
திருட்டு நகைகளை பங்கு போட்ட போலீசார்
சென்னை: சென்னையில் தனிப்படை போலீசார் 3 பேர் விடுப்பு எடுத்து, கொள்ளை கும்பல் திருடிய நகைகளை வாங்கி, அவர்களுடன் பங்கு போட்டு கொண்டது அம்பலமாகியுள்ளது. 20 சவரன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரை, தனிப்படை போலீசார் பங்கு போட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் சென்னை போலீஸ் இணை கமிஷனர் விளக்கம் கேட்டுள்ளார்.
இந்தியா
அமேதியில் குடும்பமாக சென்று ராகுல் மனுதாக்கல்
புதுடில்லி : காங்.தலைவர் ராகுல், தனது சகோதரியும் பிரியாங்காவின் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தார்.
தமிழகம்
நகை திருட்டு: 3 பேர் கைது
சென்னை: சென்னை திருநகர் பூங்காவில் உள்ள நகை பட்டறையில் கடந்த மாதம் 25ம் தேதி 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த சம்பவம் தொடர்பாக, நகைப்பட்டறையில் வேலைபார்த்த ராகுல், அன்மந்த பவார், பிரகாஷ் ஆகியோரை மஹாராஷ்டிராவில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம்
தனிநபர் விமர்சனத்தில் நம்பிக்கை இல்லை : அமைச்சர்
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு தனி நபர் விமர்சனத்தில் நம்பிக்கையில்லை. ஆனால், இதனை ஸ்டாலின் தான் துவக்கி வைத்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில் தான் முதல்வர் பேசி வருகிறார். வேறு வழியில்லாமல், திமுகவினருக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுத்து வருகிறோம். விமர்சனம் செய்வோருக்கு சொல்லடியும் பதிலடியும் கொடுத்து வருகிறோம். நெருப்பில் கை வைக்காமல் இருப்பது ஸ்டாலினுக்கு நல்லது. பொது நலன் அடிப்படையில், நதிகள் இணைப்பிற்கு ரஜினி ஆதரவு தருகிறார் என்றார்.
தமிழகம்
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு
வேலூர்: வேலூரில் துரைமுருகன் வீடு, சிமென்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காட்பாடி போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.மேலும், தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், திமுக பிரமுகர் சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது தவறான பிரமாண பத்திரம் தாக்கல், லஞ்சம் கொடுக்க முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா
மருமகளை நம்பும் மாமனார்
புதுடில்லி: ஆந்திராவில் மகனை வெற்றி பெற வைக்க மருமகளை நம்பி இருக்கிறார் மாமனார் சந்திரபாபு நாயுடு.
தமிழகம்
மதுரை தேர்தலை நிறுத்தக்கோரி வழக்கு
மதுரை : மதுரையில் லோக்சபா தேர்தலை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பெரிய கட்சிகளின் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தவறி விட்டதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியா
மண் சரிவு : 11 தொழிலாளர்கள் பலி
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் திலேக் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கும் போது மண் சரிவு ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
தெலுங்கானா முதல்வருக்கு நோட்டீஸ்
ஐதராபாத் : தேர்தல் விதிகளை மீறியதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மார்ச் 17 ம் தேதி கரீம்நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய போது இந்துக்களுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சந்திரசேகர ராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகம்
மருத்துவமனையில் அலுவலர் கொலை
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணியாற்றியவர் தமிழ்ச்செல்வன். இவரை அருண்குமார் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். அவரை கைதுசெய்த போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
காம்பிர் சிக்சர் : மெகபூபா கோபம்
புதுடில்லி : ட்விட்டரில் நடந்த கருத்து மோதல்களை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, 'பிளாக்' செய்துவிட்டார். சமீபத்தில் பா.ஜ., தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் 370 வது பிரிவு, மற்றும் 35 ஏ பிரிவுகள் நீக்கப்படும் என்று இடம்பெற்றிருந்தது. இதனை மெகபூபா கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த கவுதம் காம்பீர் சூடாக பதிலளித்திருந்தார். இந்த நிலையில் மெகபூபா, காம்பிரை ட்விட்டரில் 'பிளாக்' செய்துவிட்டார். பின்னர், புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து தெரிந்துகொண்டு பதிவிடுவது நல்லது என அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசியல் களத்திலும் காம்பிர் சிக்சர் விளாசி விட்டதாக, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா
மோடி சினிமாவுக்கு தேர்தல் கமிஷன் தடை
புதுடில்லி : லோக்சபா தேர்தல் நேரத்தில் பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தை நாளை (ஏப்.,11) வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
General
Twitter
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாக ஸ்டாலின் பயணித்த போது சற்று தூங்காமல் வந்திருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகளை கண்கூடாக கண்டிருக்க முடியும்.
General
மீண்டும் மோடி வந்தால் நல்லது: பாக்., பிரதமரே சொல்கிறார்
இஸ்லாமாபாத் : மீண்டும் பிரதமர் மோடி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் இரு நாட்டு தரப்பு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இந்தியா
பா.ஜ., தேர்தல் அறிக்கைக்கு 200 மார்க்
மும்பை : பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைக்கு 100 க்கு 200 மார்க் அளிப்பதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தெரிவித்துள்ளது.
இந்தியா
குறைந்தது 50; நிறைந்தது நம்பிக்கை
புதுடில்லி: 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் 50 தொகுதிகள் குறைவாக காங்., போட்டியிட்டாலும் ஆட்சியை பிடிக்கலாம் என்று நம்புகிறது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 415 தொகுதிகள் மட்டுமே காங்., போட்டியிடுகிறது. 138 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டது. இதனாலேயே ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி காங்.,கிற்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகிறது.
இந்தியா
ரபேல் தீர்ப்பு : ராகுல் கருத்து
அமேதி : ரபேல் ஆவணங்கள் வெளியானது குறித்து விரிவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்., தலைவர் ராகுல், ரபேல் ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஊழல் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. காவலாளியே திருடனாகி உள்ளார் என்றார்.
இந்தியா
யாஷின் மாலிக் ஆஜர்
புதுடில்லி : பிரிவினை வாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கின் குற்றவாளியான யாஷின் மாலிக் டில்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினை வாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், தேசிய புலனாய்வுக்குழு யாஷின் மாலிக்கை கைது செய்திருந்தது. இவர் தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எப்) தலைவராவார். கடந்த மாதம் காஷ்மீர் மாநில சிறையிலிருந்து டில்லி திகார் சிறைக்கு யாஷின் மாலிக் மாற்றப்பட்டருந்தார். இதுபோல, பல்வேறு பயங்கரவாத குற்றங்கள் குறித்த வழக்குகளும் இவர் மீது நடந்து வருகின்றன. சி.பி.ஐ., கோரிக்கையின்படி சில வழக்குகளில் தீர்ப்பை காஷ்மீர் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இந்தநிலையில் டில்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி ராகேஷ் சியாள் முன் யாஷி்ன் மாலிக் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.
இந்தியா
வருண் ரூ.38,000 போன் பில் பாக்கி
பிலிபிட் : பா.ஜ., எம்.பி., வருண், 2009 - 2014 வரை ரூ.38,000 போன் பில் கட்டாமல் பாக்கி வைத்திருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. வருண் மீது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா
ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது
ஜூனாகர் : ஊழல் செய்வதற்காகவே காங்., ஆட்சிக்கு வர துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம் ஜூனாகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
General
ராகுல் கருத்து கோர்ட் அவமதிப்பு: நிர்மலா
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் சொல்லாததை காங்., தலைவர் ராகுல் கூறியிருப்பது கோர்ட் அவமதிப்பு ஆகும் என மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகம்
தமிழகத்தில் 4 இடங்களில் ராகுல் பிரசாரம்
சென்னை : ஏப்ரல் 12 ம் தேதி தமிழகம் வரும் காங்., தலைவர் ராகுல், 4 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்தியா
நக்சல் தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர் படுகாயம்
மகாராஷ்டிரா : மகாராஷ்ட்டிரா மாநிலம் கட்சிரோலியில், நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். எட்டப்பள்ளி பகுதியில் நடந்த இத்தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்தியா
5 ஐகோர்ட்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் பரிந்துரை
புதுடில்லி : ஐந்து உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை, நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தான், கேரளா, மேகாலயா, ஆந்திரா, சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க மூத்த நீதிபதிகள் குழுவான கொலிஜியம், 5 நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய குழு இந்த பரிந்துரையை அளித்துள்ளது. டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்தர பட், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திரன் மேனன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிட்டல், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத், மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா ஆகியோர்களை, கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது.
General
'ஜாலியன் வாலாபாக்' படுகொலைக்கு 100 ஆண்டுக்கு பின் பிரிட்டன் வருத்தம்
லண்டன்: சுதந்திர போராட்டத்தின்போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே ''இந்த சம்பவம் பிரிட்டிஷ் இந்தியா வரலாற்றில் அழியாத வடு'' என்றார். படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டன் பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியா
பா.ஜ எம்.எல்.ஏ மாரடைப்பில் மரணம்
ஆக்ரா: உ.பி., மாநில பா.ஜ., எம்.எல்.ஏ ஜெகன் பிரசாத் கார்க்(65) மாரடைப்பால் இன்று(ஏப்.,10) மரணம் அடைந்தார். உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஜெகன் பிரசாத் கார்க்.. இவர் இன்று (ஏப்.10) உடல்நிலை நலிவு காரணமாக அங்குள்ள புஷ்பாஞ்சலி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென அவருக்கு வலியுடன் மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் ,சிகிச்சை பலனின்றி கார்க் இன்று காலமானார். லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ., உயிரிழந்தது ஆக்ராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்க் உடலுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா
குஜராத்தில் 3 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
காந்திநகர்: குஜராத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் அல்பேஷ் தாக்கூர், தவல்சின் தாக்கூர், பரத்ஜீ தாக்கூர் தங்களது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்திருப்பது காங்., கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா
விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை நடை திறப்பு
சபரிமலை: சித்திரை மாத பூஜை, விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(ஏப்.,10) மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து, தீபாராதனை நடத்தினார். வரும் 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
இலவச அரிசி திட்டம் நிறுத்தம் : புதுவை முதல்வர் தாக்கு
புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளரை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி இன்று ( ஏப்.10) பிரசாரம் செய்தார். புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பாக வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உப்பளம் தொகுதியில் முதல்வர் நாராயணசாமி இன்று (ஏப்.10) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது : மோடியும் , கவர்னர் பேடியும் புதுச்சேரியில் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவிட்டனர். இதற்கு மூல காரணம் ரங்கசாமி. இதன் காரணமாகவே கவர்னர் மாளிகை முன்பு நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதன் பிறகே அரிசி கிடைத்தது. ஆனால் தேர்தலை காரணம் காட்டி இலவச அரிசி விநியோகத்தையும் ரங்கசாமி தடுத்து நிறுத்தினார். மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
இந்தியா
'ஜனநாயக கடமையாற்றுங்கள்': தலைமை தேர்தல் கமிஷனர்
புதுடில்லி: 'அதிகளவில் பொதுமக்கள் ஓட்டுசாவடிக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்' என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியா
நாடு முழுவதும் ரூ.2,385.65 கோடி பறிமுதல்
புதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் இதுவரை ரூ.2,385.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா
அறிவியல் ஆயிரம்: சூரியனுக்கு திரை
சூரியனுக்கு திரைசூரிய வெளிச்சம் உள்ளே வரும் வகையில் வீடுகளை கட்டினால், பகலில் மின்சார தேவையை மிச்சப்படுத்தலாம். ஆனால் சூரிய வெளிச்சம், கட்டடத்திற்குள் வெப்பத்தையும் கொண்டு வருகிறது. இதற்கு தீர்வாக மிகுந்த வெப்ப நகரான அபுதாபியில், கட்டடத்திற்கு வெளியே பைபர் கிளாசைப் பயன்படுத்துகின்றனர். இதனால் வெளிச்சம் மட்டும் உள்ளே வரும். சூரியகாந்தி மலரைப் போன்று, சூரியன் இருக்கும் திசையில் இந்த பைபர் கிளாஸ் போர்வைகள் இருக்கும். கட்டடத்தை விட்டு 6 அடி தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன.தகவல் சுரங்கம்: இளம் எம்.பி., இந்தியாவில் 16 லோக்சபா தேர்தல்கள் நடை பெற்றுள்ளன. இதில் குறைந்த வயதில் எம்.பி., ஆனவர் துஷ்யந்த் சவுதாலா. இவர் 1988 ஏப்., 3ல் ஹரியானாவின் ஹிசாரில் பிறந்தார். இந்திய தேசிய லோக் தளம் கட்சி சார்பில் 2014ல் நடந்த தேர்தலில் ஹரியானாவின் ஹிசார் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளர் குல்தீப்பை, 31,847 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.பி., ஆனார். அப்போது அவருக்கு வயது 26. 2018ல் அக்கட்சியில் இருந்து வெளியேறி ஜனாயக், ஜனநாயக கட்சியை தொடங்கினார். இவர் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன்.
இந்தியா
பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா
கோல்கட்டா: 'வரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் சோப்ரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: வரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும். மோடி மீண்டும் பிரதமராக முடியாது. மத்தியில் நல்ல ஆட்சி வர வேண்டும். கடந்த நான்கரை ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றிய மோடி, இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் நாட்டு பணி செய்வதாக கூறுகிறார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவரவும் முயற்சி செய்கின்றனர். மோடியை வெளியேற்றவே ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மோடி வெளியேற்றப்பட்டதும் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க பணியாற்றுவோம். மேற்கு வங்கத்தில் என்.ஆர் காங்கிரசிற்கும், பா.ஜ அரசிற்கும் வெற்றி பெற இடமில்லை. டார்ஜிலிங் தொகுதியில் இரண்டு முறை பா.ஜ வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இவ்வாறு மம்தா பேசினார்.
இந்தியா
லாலுவுக்கு ஜாமின் கிடையாது: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், 'ஜாமின்' கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
General
Twitter
ரபேல் விவகாரத்தில் தரகர்களுடன் ராகுலின் குடும்பத்தினர் அனைவரும் தொடர்பில் இருந்தனர். ரபேல் வாங்காமல் காலம் தாழ்த்தியது காங்., குடும்பத்தால் தான்.
தமிழகம்
தேர்தல் சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம்
சென்னை : தமிழக சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் டிஜிபியாக டி.கே ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் கால பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. சிறைத்துறை டிஜிபியாக உள்ள சுக்லா கூடுதலாக தேர்தல் கால டிஜிபியாகவும் செயல்படுவார் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
தமிழகம்
பிரதமர் கூட்டத்திற்கு வராத அ.தி.மு.க., வேட்பாளர்
கோவை : ஈரோடு லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் மணிமாறன், கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்காதது, கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் நேற்று முன்தினம் மாலை, பிரதமர் மோடி, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கோவை, பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., வேட்பாளர்கள் திருப்பூர் - ஆனந்தன், பொள்ளாச்சி - மகேந்திரன், நீலகிரி - தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். ஈரோடு, அ.தி.மு.க., வேட்பாளர் மணிமாறனுக்கு, தகவல் கொடுத்தும், அவர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, பா.ஜ.,வினர் கூறுகையில், 'ஈரோடு வேட்பாளருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். ஈரோட்டில், அ.தி.மு.க., சற்று பின்தங்கி உள்ளதால், இக்கூட்டத்துக்கு வர வேண்டாம் என, அ.தி.மு.க.,வினர் கூறியதால், அவர் வரவில்லை' என்றனர்.மணிமாறனை போனில் தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் எடுத்தார். அவரிடம் கேட்டபோது, 'பிரதமர் கூட்டத்துக்கு, மதியம் தாமதமாகத்தான் அழைப்பு கிடைத்தது. வேட்பாளர் துாரமாக பிரசாரத்தில் இருந்ததால், உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தாமதமாக அழைத்தால் என்ன செய்வது. வேறு எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.இப்பகுதி தேர்தல் பொறுப்பாளரான, அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''வேட்பாளர்களுக்கு தாமதமாகவே அழைப்பு விடுக்கப்பட்டதால், பங்கேற்க இயலவில்லை. தவிர, தீவிர பிரசாரம் நடப்பதால், அவர் உடனடியாக வர முடியாத நிலை ஏற்பட்டது. வேறு பிரச்னை ஏதுமில்லை,'' என்றார்.ஆனாலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்குள், இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
எஸ்.எம்.முத்துகிருஷ்ணன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சியில் இருப்போர், தேர்தலின் போது, தாங்கள் செய்த சாதனையை, மக்களிடம் எடுத்துரைத்து, பிரசாரம் செய்வர்; எதிர்க்கட்சியினரோ, ஆட்சியில் உள்ள குறைகளை கூறி, பிரசாரம் செய்வர். சமீப காலமாக, தே.மு.தி.க., தலைவரின் உடல் நிலையை, எள்ளி நகையாடி, ஓட்டு கேட்பது அதிகரித்துள்ளது; இது, கண்டிக்கத்தக்கது.சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக, பிரசாரம் செய்த, பட்டிமன்ற பேச்சாளர், திண்டுக்கல் லியோனி, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தின் உடல்நலத்தை கிண்டல் செய்து பேசியது, அருவறுக்க வைத்தது.கடந்த, 1986ல், மதுரையில் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டம் ஒன்றில், 'தீப்பொறி' ஆறுமுகம், பேசுவதற்கு எழுந்து வந்து, 'மைக்' முன், மூன்று நிமிடம் பேசாமல் நின்றார். அப்போது தொண்டர்கள், 'பேசுங்கள்...' என, கூச்சலிட்டனர். உடனே, தீப்பொறி ஆறுமுகம், 'நான், மூணு நிமிஷம் தான், பேசாம இருந்தேன். ஆனா, மூன்று ஆண்டுகளாக, 'ஊமையன்' ஒருத்தர், பேசாமலேயே, தமிழகத்தை ஆள்றார்யா... யாராவது, கேள்வி கேட்கிறீங்களா?' என்றார்.அப்போது, எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சை முடித்து, தமிழக முதல்வராக ஆட்சி நடத்தினார். அவரை, கிண்டல் செய்தே, தீப்பொறி ஆறுமுகம் பேசினார். இதையறிந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆரை கிண்டல் செய்த, தீப்பொறி ஆறுமுகத்தை, மன்னிப்பு கேட்கும் வரை, கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்து, உத்தரவிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தாலும், பிறரின் உடல்நலக் குறையை கிண்டல் செய்வதை, கருணாநிதி ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று, தி.மு.க., பேச்சாளர், லியோனி, அதே போன்ற தவறை செய்திருக்கிறார்; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நடவடிக்கை எடுப்பாரா?***
தமிழகம்
பெரியகுளம் அ.ம.மு.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
தேனி : தேனியில் பெண் புகாரில் பெரியகுளம்(தனி) சட்டசபை தொகுதி அ.ம.மு.க, வேட்பாளர் டாக்டர் கதிர்காமு 61, மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், ஏமாற்றியது ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வராக இருந்தவர் கதிர்காமு. அ.தி.மு.க.,வில் போட்டியிட்டு பெரியகுளம் எம்.எல்.ஏ., வானார். தினகரனுக்கு ஆதரவு அளித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இவர் மீது பெரியகுளம் சருத்துப்பட்டியை சேர்ந்த 36 வயதான பெண், பாஸ்கரன் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:எனது தந்தைக்கு கால்வலிக்காக அல்லிநகரத்தில் உள்ள டாக்டர் கதிர்காமுவின் கிளினிக்குக்கு சென்றேன். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். நான் உடனிருந்தேன். கடந்த 2015 அக்., 14 பகல் 2:00 மணிக்கு எனது முழங்காலில் வலி ஏற்பட்டது. அதற்கு கதிர்காமு எனக்கு மயக்க ஊசி போட்டார். சிறிது நேரத்தில் நான் மயங்கினேன். ஒரு மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. அப்போது நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது.அப்போது, உன்னை பிடித்திருக்கிறது. உன்னையும், உன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன். நானும் நீயும் இருப்பதை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளேன். நீ, எனக்கு இணங்க மறுத்தால் அதை இணையத்தில் வெளியிடுவேன்' என மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.கெஞ்சினேன்2017 மே 7 ல் அவரை தொடர்பு கொண்டு வீடியோ, புகைப்படங்களை தந்து விடுங்கள் என கெஞ்சினேன். எம்.எல்.ஏ., அலுவலகம் வரச் சொன்னார். அங்கு சென்றேன். அங்கு அவருடன் கட்சியின் முக்கிய வி.ஐ.பி., ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் இருந்தனர். அவர்கள் சென்றவுடன், கதிர்காமுவிடம் வீடியோ, புகைப்படங்களை கேட்டேன்.அதற்கு, அந்த வி.ஐ.பி., உன் மீது ஆசைப்படுகிறார். அவருடன் நீ நெருக்கமாக இரு. மறுத்தால் உன்னை குடும்பத்தோடு கொளுத்தாமல் விட மாட்டேன் என்று மிரட்டினார். அதனால் எனது மானத்திற்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு அளித்து கதிர்காமுவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குமகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா, ஏமாற்றி மோசடி செய்வது, ஆயுதமில்லாமல் கொலை மிரட்டல் விடுவது, பாலியல் பலாத்காரம்' உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். கதிர்காமு பிரசாரத்தை நிறுத்திவிட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் மனு செய்துள்ளார். இப்பிரச்னை குறித்து கதிர்காமு கூறியது: தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆளுங்கட்சியினர் துண்டுதலால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக சந்திப்பேன்' என்றார்.இந்நிலையில் அந்த பெண்ணுடன் கதிர்காமு இருக்கும் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்தியா
'டவுட்' தனபாலு
தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்: என் வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரி சோதனையின் போது, என் மகன் கதிர்ஆனந்தை கழிப்பறைக்கு செல்லவோ, காபி குடிக்கவோ அதிகாரிகள் அனுமதிக்காமல் அலைக்கழித்தனர்.டவுட் தனபாலு: மிசாவில் மிதிபட்டு, தண்டவாளத்தில் தலை வைத்து, பாம்பு, பல்லிகள் மத்தியில் சிறையில் அடைபட்டு, இவ்வளவு துாரம் வளர்ந்த கட்சியில் இருந்துட்டு, இதற்கே இப்படிக் கலங்கினால் எப்படி... கட்சிக்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான், எந்த சவாலையும் எதிர்கொண்டு, அவர்களால் மக்களுக்கான பணியைத் தொடர முடியும்னு, இதனால்தான் சொல்றாங்களோ என்ற, 'டவுட்' வருதே...!***தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது தான் தவறு. அன்று வைக்காமல் இருந்தால், விஜயகாந்த் தான் இன்று முதல்வராக இருந்திருப்பார்.டவுட் தனபாலு: கூட்டணியில் இருப்பதால், என்ன சொன்னாலும், அ.தி.மு.க., தரப்பில் இருந்து பதிலடி வராது என்ற தைரியத்தில், 'விஜயகாந்த் எடுத்த தவறான முடிவால் தான், இப்போ நீங்க ஆட்சியில் இருக்கீங்க'ன்னு, போட்டுத் தாக்குறீங்க... 2024 லோக்சபா தேர்தலின் போது, '2019ல், தனித்து, நாற்பது தொகுதிகளில் நின்றிருந்தால், விஜயகாந்த் தான் இன்று பிரதமராக இருந்து இருப்பார்'னு, சொன்னாலும் சொல்வீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...!***தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி: வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை, தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.டவுட் தனபாலு: கொடுத்த பணத்தை வாங்க மாட்டேங்குறாங்களா... ஆரத்தி எடுக்க, அதிகப் பணம் கேட்குறாங்களா... சிவகங்கையில், கார்த்தி சிதம்பரத்திடமே இந்தப் பஞ்சாயத்தை, ஆரத்தி எடுத்த பெண்கள் எழுப்பினாங்களே... அதனால் தான், இந்தக் கோபமோ என்ற, 'டவுட்' வருதே...!
தமிழகம்
சிவகங்கை மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் நேற்று மருந்தாளுனர் தமிழ்ச்செல்வனை 36, அருண்குமார் 23, கத்தியால் 17 இடங்களில் குத்தி கொலை செய்தார். தனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்ததாக அவர் போலீசாரிடம் கூறினார்.சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரை சேர்ந்த விவசாயி அழகுஜோதி. மனைவி சாந்தி 39. இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருண்குமார் எலட்ரீஷியன். சிவகங்கையைச் சேர்ந்தவர் மருந்தாளுனர் தமிழ்ச்செல்வன். மனைவி பிரிந்துவிட்டார். சிவகங்கை அரசு மருத்துவமனை மருந்தாளுனர் சுவாமிநாதன் 56. ஆறு மாதமாக மருந்தகத்தில் சாமிநாதனுக்கு தமிழ்ச்செல்வன் உதவியாக இருந்தார். தாயாரின் கள்ள உறவு தமிழ்ச்செல்வனுக்கும் சாந்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அருண்குமார் கண்டித்தும் கேட்கவில்லை. நேற்று காலை உறவினர் இல்ல விழாவில் அருண்குமாரை உறவினர்கள் தாயாரின் கள்ள உறவு குறித்து கேலி செய்தனர். இதனால் அருண்குமார் நேற்று மருத்துவமனைக்கு சென்றார். மருந்தகத்தில் இருந்த தமிழ்ச்செல்வனுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். குழந்தைகள் நல வார்டிற்குள் தப்பி ஓடிய அவரை விரட்டி சென்ற அருண்குமார் 17 இடங்களில் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கேயே உட்கார்ந்தார். அவரை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் கைது செய்தார். வாக்குமூலம்அருண்குமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எனது தந்தை உடல்நலமின்றி ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். தாயுடன் தமிழ்ச்செல்வனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பலமுறை கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை. நேற்று உறவினர்கள் இல்ல விழாவில், உன் தாயார் இருக்கிறாரா, ஓடி விட்டாரா என என்னை கேலி செய்தனர். உடனே நான் வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டப்பட்டிருந்தது. உறவினர் கேலி செய்தது போலவே தாயார் வீட்டை விட்டு வெளியேறியதை உறுதி செய்தேன். தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு சென்றேன். அவரது வீடும் பூட்டப்பட்டிருந்தது. தாயாரும், தமிழ்ச்செல்வனும் ஓடிப்போயிருக்கலாம், என முடிவு செய்தேன்.தமிழ்ச்செல்வனின் அலைபேசியில் தொடர்புகொண்டு என் தாயாரை காணவில்லை,'' என்றேன். அதற்கு அவர், எனக்கு தெரியாது, நான் அரசு மருத்துவமனையில் இருக்கிறேன்' என்றார். நான் அங்கு சென்று அவரிடம் கேட்டபோது திமிராக பதிலளித்தார். ஆத்திரமடைந்த நான் கத்தியை எடுத்து அவரது நெஞ்சு, வயிறு பகுதிகளில் விரட்டி விரட்டி குத்தினேன். போலீசாரிடம் சரணடைவதற்காக உடல் அருகிலேயே அமைதியாக இருந்தேன். இவ்வாறு அருண்குமார் கூறினார்.சுவாமிநாதன் கூறியது: பார்மசிஸ்ட் படிக்கும்போது எனக்கு தமிழ்ச்செல்வன் ஜூனியர். வேலை விஷயமாக என்னை சந்திக்க வருவார். மற்றபடி இங்கு அவர் வேலை பார்க்கவில்லை. நேற்று காலை தமிழ்ச்செல்வன் என்னுடன் உள்ளே இருந்தார். அப்போது வந்த வாலிபர் கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். சர்க்கரை நோய் பாதிப்புள்ள நான் ரத்தத்தை பார்த்ததும் மயங்கி விட்டேன், என்றார்.
தமிழகம்
370 மி.கிராம் தங்கத்தில் டார்ச் தயாரித்த கமல் ரசிகர்
ஸ்ரீவில்லிபுத்துார் : கமலுக்கு வழங்க 370 மில்லி கிராம் தங்கத்தில் டார்ச் லைட்டை ஸ்ரீவில்லிபுத்துார் ரசிகர் மணிகண்டன் 39, வடிவமைத்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்துார் நம்பிநாயுடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். நகைகடை உரிமையாளர். குறைந்தளவு தங்கம் மற்றும் வெள்ளியில் பல்வேறு பொருட்களை தயாரித்து பல விருதுகளை பெற்றுள்ளார். லிம்கா மற்றும் இந்தியன் புக் ரிகார்ட்ஸ் சான்றிதழும் பெற்றுள்ளார். நடிகர் கமலின் ரசிகரான இவர், 370 மில்லி கிராம் தங்கத்தில் 12 மில்லிமீட்டர் உயரத்தில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை உருவாக்கியுள்ளார். பட்டனை அழுத்தினால் வெளிச்சம் தெரியும்.மணிகண்டன் கூறுகையில், 'கமலுக்கு பரிசளிக்க இதை தயாரித்துள்ளேன்' என்றார்.
இந்தியா
பேச்சு, பேட்டி, அறிக்கை
'ரொம்ப அதிகம் பேசுறீங்க... எந்த கட்சியோட கூட்டணி வைத்தாலும், எதிராளியை சகட்டுமேனிக்குப் பேசினா, உங்களைப் பற்றியும், உங்கள் மகனைப் பற்றியும் நடக்கும், இப்போதைய, 'கலாய்க்கல்'கள், பஞ்சம் இல்லாமல் தொடரும்... எப்படி வசதி...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சேரவில்லை என்ற கோபத்தில், தேர்தல் பிரசாரத்தில் என்னை, திட்டித் தீர்க்கிறார், ஸ்டாலின். தி.மு.க., ஒரு கட்சியே இல்லை; அது ஒரு, கார்ப்பரேட் நிறுவனம். அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குனர், ஸ்டாலின். தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., எப்போது வெளியே போனாரோ, அப்போதே, தி.மு.க., அழிந்துவிட்டது. இன்று, அ.தி.மு.க., பெரிய கட்சியாக வளர்ந்து இருப்பதற்கும், தி.மு.க.,வினர் தான் காரணம்.'மண் புழு, விஷப்புழுன்னு பேசுறதெல்லாம், கவுரவம் மிக்க பிரசாரமா சார்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், திருச்சி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர் திருநாவுக்கரசர் பேச்சு: ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை திசை திருப்பவே, கருணாநிதியின் மரணம் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., விமர்சிக்கிறார். இது, கண்டனத்திற்குரியது. முதல்வர் தகுதிக்கு, இது பண்பல்ல. அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள், தற்போது தரம் தாழ்ந்து விட்டன. தரமற்ற அரசியல்வாதிகளை, பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதே இதற்குக் காரணம்.'இலவச கல்வி வழங்குறவங்க எல்லாரும், கறுப்புப் பணத்தில் தான் அதைச் செய்யிறாங்கன்னு சொல்ல வர்றீங்களா... உங்க கூட்டணியில, கல்லுாரிகள் நடத்துற, ஏ.சி.சண்முகம் இருக்காருங்கறதை, மறந்துட்டீங்களா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், கரூர் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர், தம்பிதுரை பேச்சு: கறுப்பு பணம் இருந்தால் தான், இலவசமாக கல்வி வழங்க முடியும். என்னிடம், கறுப்பு பணம் கிடையாது. இருப்பினும், 45 கல்லுாரிகள் எனக்கு இருப்பதாக, பொய் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் மீது, விரைவில் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்படும். என் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால், அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா?'எதிராளி துாற்றுவது தான், உங்கள் பலம்ன்னு எடுத்துக்குங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர், பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி, எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில், சிறப்பான தேர்தல் அறிக்கையை, பா.ஜ., கொடுத்துள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கையை ஸ்டாலின், 'பூஜ்ஜியம்' எனக் கூறியதன் அர்த்தம் புரியவில்லை. பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் என, ஸ்டாலின் வாழ்ந்து வருகிறார். வெளியே வந்து பார்த்தால், பா.ஜ., சதம் அடித்திருப்பது, அவருக்குத் தெரியும்.
இந்தியா
அரக்கோணத்தில் நள்ளிரவில் நடக்கும் பட்டுவாடா!
''சான்றிதழுக்கு தகுந்த மாதிரி வருமானம் பார்த்துடுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாருங்ணா அது...'' எனக் கேட்டார், கோவை, கோவாலு.''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற, பெண், வி.ஏ.ஓ.,வை தான் சொல்றேன்... ஒரு மாசத்துக்கு முன்னாடி தான், இங்க வந்தாங்க... ''வந்ததுமே, 'கமிஷன்' வேலையை ஆரம்பிச்சுட்டாங்க... ஜாதி, வருமானம், இருப்பிடம்னு, எந்த சான்றிதழா இருந்தாலும், பணம் குடுத்தா தான், சான்றிதழ் குடுக்க, பரிந்துரை செய்றாங்க... ''அதுலயும், பட்டா பெயர் மாத்துறதுக்கு, இடத்துக்கு ஏற்ப, 10ல இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்குறாங்க... தரலைன்னா, வேணும்னே அலைய விடுறாங்க... இதுக்கு, அவங்களின் உதவியாளரும், உடந்தையா இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.''வசந்தியும், கண்ணனும், பைக்ல வேகமா எங்க போறாளாம் ஓய்...'' என, தெருவைப் பார்த்து, குப்பண்ணா கேட்க, ''செம்பாக்கம் போவாங்களா இருக்கும்...'' என்ற அன்வர்பாய், ''பதிவுத் துறையில நடக்கிற, வசூல் வேட்டையை கேளுங்க பா...'' என்றபடியே தொடர்ந்தார்... ''பதிவு துறையில, வசூல் அதிகம் உள்ள இடங்களை பிடிக்க, சார் - பதிவாளர்கள் மத்தியில, கடும் போட்டி இருக்கும்... இப்ப தேர்தல் சீசனா இருக்கிறதால, இதைச் சொல்லியே வசூல் நடத்துறாங்க பா...''அமைச்சரின் தேர்தல் செலவுக்குன்னு சொல்லி, ஒரு கும்பல், வசூல் வேட்டையில ஈடுபட்டிருக்கு... ஒவ்வொரு சார் - பதிவாளரிடமும், முதல் கட்டமா, 2 லட்சம் ரூபாய் வரை வசூல் பண்றாங்க பா... 'தேர்தல் முடிஞ்சு, 'போஸ்டிங்' போடுறப்ப, மீத தொகையை குடுத்துடணும்'னு பேசி வசூல் நடக்குது... இதுக்கு மூளையா, கூடுதல், ஐ.ஜி., ஒருத்தரே செயல்படுறாரு பா...'' என்றார் அன்வர்பாய்.''சீனிவாசன் வரார்... நாயரே சுக்கு காபி போடும்...'' என்ற அண்ணாச்சி, ''நடுச்சாமத்துல, பணத்தை பட்டுவாடா செய்யிதாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார்.''எந்த தொகுதியில பா...'' என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.''அரக்கோணத்துல தான்... இங்க, தி.மு.க.,வின், ஜெகத்ரட்சகனும், பா.ம.க.,வின், ஏ.கே.மூர்த்தியும் போட்டியிடுதாங்கல்லா... இவங்க, கூட்டணியில இருக்கிற முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளுக்கு, பகல் நேரத்துலயே பணம் பட்டுவாடா பண்ணிட்டு இருந்தாவ வே... ''சமீபத்துல, வேலுார், காட்பாடியில, 33 கோடி ரூபாயை, ஐ.டி.,காரங்க அள்ளிட்டு போயிட்டாங்கல்லா... அதனால, இந்த ரெண்டு தரப்புமே உஷாராயிட்டு வே...''இப்ப, சில நாட்களா, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை, ராத்திரி, 11:30 மணியில இருந்து, 1:30 மணி வரைக்கும், ஒவ்வொரு நாளும், வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி, பணத்தை குடுக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி. அரட்டை முடிய, நண்பர்கள் கிளம்பினர்.
தமிழகம்
பைக்-வேன் மோதல் : 3 மாணவர்கள் பலி
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதியதில் கல்லுாரி மாணவர்கள் லட்சுமிபதிராஜ் 19, கேசவபாண்டி 20, அலெக்ஸ்பாண்டி 21 பலியாயினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாப்பிநாயக்கன் வலசையைச் சேர்ந்த லட்சுமிபதிராஜ், ஆத்துார் தாலுகா தேவரப்பன்பட்டியைச் சேர்ந்த கேசவபாண்டி, தேனி பெரியகுளம் சிந்துவம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி ஆகியோர் நவாமரத்துப்பட்டி தனியார் கல்லுாரியில் படித்து வந்தனர். மூவரும் இருசக்கர வாகனம் ஒன்றில் நேற்று பகல் 12:00 மணிக்கு ஒட்டன்சத்திரம் நோக்கி சென்றனர். திப்பம்பட்டி அருகே, முன்னால் பழநிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் மாணவர்கள் சென்ற வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனம் மட்டும் பஸ்சின் பக்கவாட்டில் மோதி விழுந்தது. லட்சுமிபதிராஜ், அலெக்ஸ்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியாயினர். கேசவ பாண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நரசிங்கபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திகேயன் தப்பி ஓடிவிட்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
அரவக்குறிச்சியில் போட்டியிட அ.தி.மு.க.,வில் கடும் போட்டி
கரூர் : அரவக்குறிச்சி தொகுதி, இடைத்தேர்தலில் போட்டியிட, பெரும்பாலான, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளதால், கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு, மே, 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், 22ல் துவங்குகிறது.லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 18ல் நிறைவு பெறும் நிலையில், அனைத்து கட்சியினரின் பார்வையும், அடுத்து இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஒட்டப்பிடாரம், சூலுார், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகள் மீது திரும்பும். கடந்த, 2016 நவம்பரில், அரவக்குறிச்சியில் நடந்த, இடைத்தேர்தலின் போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த, இ.பி.எஸ்., தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். மேலும், 10 அமைச்சர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் பணியாற்றினர். அதுபோல் இம்முறையும், தொகுதியில் முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும், பிரசாரம் செய்வர்.யாருக்கு ஆர்வம்?அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது, மிகவும் முக்கியம் என்ற சூழ்நிலையில், கட்சித் தலைமையே தேர்தல் செலவை பார்த்துக்கொள்ளும் என்பன போன்ற பல காரணங்களால், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், தயாராகி வருகின்றனர். மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், முன்னாள் மாவட்ட, பஞ்., துணைத் தலைவர் மார்கண்டேயன், 2011ல் அரவக்குறிச்சியில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற செந்தில்நாதன், ஜெ., பேரவை இணைச்செயலர் பரமசிவம், கரூர் ஒன்றிய செயலர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் முட்டி மோதுகின்றனர்.தி.மு.க., - அ.ம.மு.க.,தி.மு.க., சார்பில், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அ.ம.மு.க., சார்பில், மாநில, ஜெ., பேரவை தலைவர் சாகுல் அமீதுக்கு சீட் கிடைக்க வாய்ப்புண்டு. இதனால், தொகுதியில் உள்ள, சிறுபான்மையினர் ஓட்டுகள் பிரியும் பட்சத்தில், செந்தில்பாலாஜிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
இந்தியா
அதுக்குள்ள கோஷ்டி பூசலா!
நீலகிரி லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர், ராமசாமியை ஆதரித்து, அக்கட்சி துணை பொதுச் செயலர் தினகரன், சுற்றுப்பயணம் செய்தார். அவிநாசி, கருவலுார் பகுதியில், அக்கட்சியைச் சேர்ந்த சிலர், தினகரனின் காரை மறித்து, நிறுத்தினர்.அவர்கள், 'மாவட்ட செயலர், ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். கட்சி வளர்ச்சிக்கு காரணமாக இருப்போருக்கு, பதவி தருவதில்லை' என, புகார் வாசித்தனர். அவற்றை கேட்ட தினகரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி, இடத்தை காலி செய்தார்.இதை கவனித்த, இளைஞர் ஒருவர், 'ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற கட்சிக்குள்ள, கோஷ்டி பூசல் வரலாம். ஆனால், ஒரே ஒரு, எம்.எல்.ஏ., மட்டும் இருக்கிற கட்சியில் கூட, கோஷ்டி பிரச்னை இருக்கு பா' என்றார். அருகிலிருந்தவர், 'இன்னும், என்னென்ன கூத்தெல்லாம் பார்க்கணுமோ...' என, தலையில் அடித்தபடியே நகர்ந்தார்.
தமிழகம்
'கைகுலுக்கி' ஓட்டு சேகரிப்பு
மதுரை : மதுரையில், தபால் ஓட்டளிக்க காத்திருந்த போலீசாரிடம், 'கைகுலுக்கி' ஓட்டு வேட்டை நடத்தியதால், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ் சத்யன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.மதுரை லோக்சபா தொகுதி, போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு, நேற்று, மீனாட்சி கல்லுாரி மையத்தில் நடந்தது.அங்கு வந்த, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யன், ஓட்டளிக்க காத்திருந்த போலீசாரிடம் கைகுலுக்கி, மறைமுகமாக, தனக்கு ஓட்டு போடும்படி கேட்டுக் கொண்டார். இதை கவனித்த அதிகாரிகள், அவரை அங்கிருந்து செல்லும்படி வலியுறுத்தினர். இதனால், ராஜ்சத்யன் புறப்பட்டார். இத்தகவல், கலெக்டர் நடராஜன் கவனத்துக்கு சென்றது. உடனே அவர், தபால் ஓட்டுப்பதிவு மையத்தை பார்வையிட்டார்.நடராஜன் கூறுகையில், ''போட்டியிடும் கட்சியின் முகவராக, வேட்பாளர்கள்,தபால் ஓட்டுப்பதிவு மையத்தை பார்வையிடலாம். ஆனால், ஓட்டு சேகரிக்க கூடாது.''அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ் சத்யன் ஓட்டு கேட்டதாக கூறப்படுகிறது. புகார் வந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஓட்டுப்பதிவு மையத்தை பார்வையிட்ட, அ.ம.மு.க., வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, ''நாங்கள் நின்றால், நடந்தால் கூட, விதிமீறல் என, வழக்குப் பதிவு செய்கின்றனர். தற்போது, தேர்தல் விதிகளை மீறி, ராஜ் சத்யன்,போலீசாரிடம் ஓட்டு கேட்டுள்ளார். சட்டப்படிநடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தமிழகம்
மதுரையில் பணப்பட்டுவாடா தேர்தலை ரத்து செய்ய வழக்கு
மதுரை : மதுரையில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் பணப் பட்டுவாடா செய்வதால், தேர்தலை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை லோக்சபா தொகுதி, சுயேச்சை வேட்பாளர், கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:மதுரை தெப்பக்குளத்தில், மார்ச், 31ல், அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு சமுதாயக் கூட்டம் நடந்தது. வாக்காளர்களுக்கு, 500 ரூபாய் கொடுத்து, வாகனங்களில், அ.தி.மு.க.,வினர் அழைத்து வந்தனர். இதற்கு, 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவித்தேன். கடந்த, 7ல், மதுரை ரிங்ரோடு பாண்டி கோவில் அருகே, அ.தி.மு.க., பிரசார கூட்டம் நடந்தது. வாக்காளர்களுக்கு, 500 முதல், 2,000 ரூபாய் வரை கொடுத்து அழைத்து வந்தனர். இதற்கு, 12 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை, அ.தி.மு.க.,வினர், 10 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளனர்.மதுரையில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர், கோடிக்கணக்கான ரூபாய் பணப் பட்டுவாடா செய்கின்றனர். தவறானசெலவு கணக்கை தயாரித்து, தேர்தல் கமிஷன் முன் சமர்ப்பிக்க உள்ளனர். வரும், 18ல், சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. மதுரை தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என, தலைமை தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.தலைமை நீதிபதி உத்தரவின்படி, தேர்தல் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற அமர்வில்,விசாரணைக்கு பட்டியலிடப்படுவது வழக்கம். அங்கு, இம்மனு மாற்றப்பட்டு, விசாரிக்கப்படும்.
இந்தியா
இசை கற்க சரியான பருவம்...
கர்நாடக இசைப் பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ: என் பெற்றோர், இசை ஆசிரியர்கள். நானும் பாடகி ஆக ஆசைப்பட்டார், அம்மா. அதனாலேயே, பக்கத்து வீட்டு நண்பர்களுடன் கூட விளையாட விடமாட்டார். பள்ளிக்கு செல்வது, வீட்டில் இசை கற்பது, சாதகம் செய்வது தான், முழுநேர வேலை.இசை மேதைகளிடம் பயின்ற நான், சென்னை வந்து, ஆல் இண்டியா ரேடியோ, துார்தர்ஷன் சேனல் மற்றும் பல்வேறு சபாக்களில் பாடி வளர்ந்தேன். கர்நாடக இசைப் பயிற்சி தான், சினிமா பாடல்கள் உட்பட பல வகையான பாடல்களையும் நான் பாடுவதற்கு அஸ்திவாரம். என் சினிமா பாடல்களை கேட்டு நிறைய ரசிகர்கள், கர்நாடக இசை கச்சேரிகளிலும் கலந்து கொள்கின்றனர்.அனைவருக்கும் பொதுவானது இசை. ஒரு பயிரின் வளர்ச்சிக்கு, அதன் விதைப் பருவம் மிக முக்கியமானது. அப்படிப்பட்ட குழந்தை பருவம் தான், கர்நாடக இசையை கற்க சரியான நேரம். என் குரல், கடவுள் அளித்த கொடுப்பினை.குரல் வளத்தை தக்க வைக்க, காலை, 4:00 மணிக்கு சாதகம் செய்ய துவங்கி விடுவேன். அடிக்கடி, 'வாய்ஸ் ரெஸ்ட்' எடுப்பேன். குரல் வளத்தைப் பாதிக்கும் சில உணவு வகைகளை தவிர்த்து விடுவேன்.ஐந்தரை ஆண்டுகளுக்கு முன், திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடி கிராமத்துக்கு, கச்சேரிக்காக சென்றேன். அப்போது, அங்கிருந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள், திருக்குறளை அழகாக படித்துக் கொண்டிருந்தனர். மழலைக் குரலால் ஈர்க்கப்பட்டு, அந்த மாணவர்களை சந்தித்து உரையாடினேன். பாரதியாரின் பாடலை நான் பாடிக்காட்ட, அக்குழந்தைகளும் மிகச் சிறப்பாக பாடினர். அப்போதிலிருந்து அவர்களுக்கு, முறைப்படி இசை கற்றுக் கொடுக்க, இசைப்பள்ளி ஆரம்பித்தேன். வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில், என் மாணவியர், இசை கற்றுக் கொடுப்பர்.மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையில், நான் பாடம் சொல்லிக் கொடுக்க சென்று விடுவேன். இப்போது, 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள், கர்நாடக இசையைக் கற்றுக் கொள்கின்றனர். மிக சிறப்பாகப் பாடுகின்றனர்.என் உலகம், இசை தான். அதில் ஓர் அங்கம், என் குடும்பம். தினமும் இசை கற்றுக் கொள்கிறேன். சபாக்களில், சினிமாவில் பாடுகிறேன். இசை வகுப்பு எடுக்கிறேன். 'ஒர்க் ஷாப்' நடத்துகிறேன். நேரம் கிடைத்தால், புத்தகம் படிப்பேன். மற்ற கர்நாடக இசைக் கலைஞர்களின் கச்சேரிகளுக்கும் ரசிகையாக செல்வேன்; கலைஞர்களை மனதாரப் பாராட்டுவேன்.இப்படி, 37 ஆண்டு களாக பாடினாலும், இசை என்ற பெருங்கடலின் ஆழத்தை நோக்கி, மகிழ்ச்சியுடன் பயணித்து கொண்டு இருக்கிறேன்.
தமிழகம்
பா.ம.க.,விலிருந்து துணை தலைவர் விலகல்
கோவை : அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்துவிட்டு, அவர்களுடன் கூட்டணி வைத்ததால், பா.ம.க.,வில் இருந்து துணை தலைவர் மணிகண்டன் விலகினார்.பா.ம.க.,வில் துணை தலைவராக இருந்தவர், பொங்கலுார் மணிகண்டன். இவர், நேற்று கோவையில் நிருபர்களிடம்கூறியதாவது:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். அன்புமணியும், முதல்வரையும், துணை முதல்வரையும் கடும் விமர்சனம் செய்தார். இப்போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது அதிர்ச்சி அளித்தது. இவர்கள், தொண்டர்களுடன் கலந்தாலோசித்து, கூட்டணி வைத்ததாக கூறுவது பொய். எனவே, பா.ம.க.,விலிருந்து விலகுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம்
குடிகார மகன் கொலை தந்தை கைது
கோவை : குடிகார மகனை கொலை செய்த தந்தையை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள, சாந்திமேடு பகுதியில் வசிப்பவன் சித்தன், 70. இவனது மகன் சதீஷ்குமார், 40; மதுவுக்கு அடிமையானதால், மனைவி, மகன் பிரிந்து சென்று விட்டனர்.நேற்று முன்தினம் இரவு, குடி போதையில் சதீஷ்குமார், தந்தையிடம் தகராறுசெய்துள்ளார். ஆத்திரம் அடைந்த சித்தன், கல்லை துாக்கி, சதீஷ்குமார் தலையில் போட்டான். பின், தன் மகன் மாடியிலிருந்து கீழே விழுந்து, காயமடைந்து விட்டதாக கூறி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தான். நேற்று காலை சதீஷ் இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார், சித்தனிடம் நடத்திய விசாரணையில், தினசரி மகன் குடித்து விட்டு வந்து தொந்தரவு செய்து வந்ததால், ஆத்திரம் தாளாமல், கல்லை துாக்கிப் போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து, அவன் கைது செய்யப்பட்டான்.
தமிழகம்
'பள்ளி விடுமுறையில் வகுப்புகள் கூடாது'
ஈரோடு : ''பள்ளி ஆண்டு விடுமுறையில், வகுப்புகள் நடத்தக்கூடாது என, அரசாணை உள்ளது. இதுபற்றி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் கண்காணிக்கும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையில், தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாணவர்களிடையே, இம்மாற்றங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, பாடத்திட்டத்தில் செய்யப்பட்டு உள்ள தரம் உயர்வுகள், குழந்தைகளுக்கு நல்ல, தரமான கல்வியை கொடுக்கிறது. ஏற்கனவே, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு, மாணவ - மாணவியருக்கு, மினி லேப் டாப், ஜூன் இறுதிக்குள் வழங்கப்படும்.ஆண்டு தேர்வு முடிந்து, பள்ளி விடுமுறை நாட்களில், வகுப்புகள் நடத்தக்கூடாது என, அரசாணை உள்ளது. அப்போது தான், மாணவர்களுக்கான அழுத்தம் குறையும். அவர்கள் சுதந்திரமாக, வெயில் காலத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அப்போதும், வகுப்புகளை வைத்தால், அவர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்படும். இதை, பள்ளி கல்வித் துறை இயக்குனரகம் கண்காணிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகம்
சேலத்தில் ராகுல், ஸ்டாலின் நாளை பிரசாரம்
சென்னை : ''சேலத்தில், நாளை ராகுலும், ஸ்டாலினும் கூட்டாக பிரசாரம் செய்கின்றனர்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் தலைவர், ராகுல், நாளை, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை தொகுதிகளில், தேர்தல் பிரசாரம் செய்கிறார். சேலம் பிரசாரத்தில், ராகுலும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.குற்றச்சாட்டுராகுல் சுற்றுப்பயணம், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின், வெற்றிக்கு வழி வகுக்கும். 'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில், பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டதால், பெரும் ஊழல் நடந்துள்ளதாக, ராகுல் குற்றம் சாட்டினர். ரபேல் ஊழல் தொடர்பான மறுசீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதன் வாயிலாக, காங்கிரஸ் குற்றச்சாட்டு உண்மை என்பது, நிரூபணமாகி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.டில்லியிலிருந்து, காலை,10:00 மணிக்கு, தனி விமானத்தில் புறப்படும் ராகுல், பெங்களூரு வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வரும் அவர், அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.பொதுக்கூட்டம்பின், ஹெலிகாப்டரில் சேலம் செல்கிறார். சேலத்தில், மதியம், 2:00 மணிக்கு, சீலநாயக்கன்பட்டி - ஆத்துார் தேசிய நெடுஞ்சாலையொட்டி, பொதுக்கூட்டம் நடக்கிறது. அங்கு, 9.6 ஏக்கரில், மேடை, 30 ஆயிரம் பேர் அமர, பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.சேலம் கூட்டத்தை முடித்து, பகல், 3:00 மணிக்கு, ராகுல், காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார்; அங்கிருந்து தனி விமானத்தில், மதுரை செல்கிறார்.
தமிழகம்
கோத்தகிரியில் காட்டுத்தீ
நீலகிரி : கோத்திகிரியில் திடீரென காட்டுத்தீ பரவியதால் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் பல வகையான மரங்களும் செடிகளும் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு துறை வீரர்கள், 3 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி கோத்தகிரியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
தமிழகம்
நான்கு தொகுதி இடைத்தேர்தல் நெருக்கடியில் மின் வாரியம்
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல், இடைத்தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து, மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு, தொடர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கோடைக் காலம் துவங்கியதால், தமிழக மின் தேவை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 18ல், இடைத்தேர்தல் நடக்கிறது.இதனுடன், தற்போது, கிரிக்கெட் போட்டியும் நடந்து வருவதால், மின் தேவை, 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியுள்ளது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்யும் பணியில், 24 மணி நேரமும், தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில், பொறியாளர்கள் உள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம்; கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்; கோவை மாவட்டம், சூலுார் ஆகிய தொகுதிகளுக்கு, மே, 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின்சாரம் கிடைத்தும், மின் சாதன பழுதால், மின் தடை தொடர்கிறது.குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், மின் தேவை, மிகவும் அதிகம் உள்ளது. இதனால், அந்த சமயங்களில், துணை மின் நிலையங்களில் உள்ள சாதனங்களில், அதன் முழு திறனில், மின்சாரம் செல்கிறது. அப்போது, சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, சில நிமிடங்கள், மின் சப்ளையை நிறுத்த வேண்டும். தற்போது, தேர்தல் நடப்பதால், அதை கூட செய்ய முடியாத நிலை உள்ளது.மே மாதம், மின் தேவை, தற்போது இருப்பதை விட அதிகம் இருக்கும். ஏப்ரல், 18ம் தேதியுடன், தேர்தல் முடிந்து விடும் எனக் கருதி, அதற்கு பின், அதிக திறன் துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணி செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சூழலில், மே, 19ல், நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், தொடர் நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகம்
த.மா.கா.,விடம் பாராமுகம் அ.தி.மு.க., மீது புகார்
அ.தி.மு.க., கூட்டணியில், கடைசி கட்சியாக சேர்ந்த, த.மா.கா.,வை, தேர்தல் பணிகளில் கண்டு கொள்ளாமல் இருப்பதால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இத்தகவல், அக்கட்சியின் மூத்த துணை தலைவர் ஞானதேசிகனுக்கு தெரிய வந்ததும், அவர் ஆளுங்கட்சி மேலிடத்திடம் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடு செய்துள்ளார்.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., கடைசி கட்சியாக இடம் பெற்றது. தஞ்சாவூர் தொகுதியில், த.மா.கா., வேட்பாளர் நடராஜன், 'ஆட்டோ' சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, த.மா.கா., தலைவர் வாசன், சூறவாளி பிரசாரம் செய்து வருகிறார். மாநில துணைத் தலைவர் ஞானதேசிகன், மூன்று நாள் சுற்றுப்பயணமாக, தென் மாவட்டங்களுக்கு சென்றார்.அப்போது, மதுரை, துாத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல் தொகுதிகளில், ஆளுங்கட்சியினர், த.மா.கா.,வை கண்டுகொள்வதில்லை என்றும், தேர்தல் பணிகளுக்கு, த.மா.கா.,வினரை அழைப்பது இல்லை என்றும், புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, ஆளுங்கட்சி மேலிடத்திடம், ஞானதேசிகன் பேசினார். இதையடுத்து, ஆளுங்கட்சியினரும், த.மா.கா.,வினரும் இணைந்து செயல்பட்டு வருவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம்
கொக்கு போல செயல்படுங்கள்!
சென்னை : 'கொக்கு போல, தி.மு.க.,வினர் செயலாற்ற வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மக்களின் மனநிலை என்ன என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக, தேர்தல் களம் வெளிப்படுத்துகிறது.லோக்சபா பொதுத் தேர்தலும், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இணைந்தே நடப்பதால், மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என, வாக்காளர்கள் நினைப்பதன் அடையாளமாகத் தான், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு, பேராதரவு பெருகி வருகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற வைக்க, மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க., நிர்வாகிகள், அதற்கு முழுமையான ஆயத்தத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.விளைந்து நிற்கிற வெற்றிக்கதிரை அறுவடை செய்து, களத்து மேட்டுக்கு எடுத்து வர வேண்டுமென்றால், விழிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டும்.தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடினோம், கலைந்தோம் என்பதாக இல்லாமல், குழுக் குழுவாகச் சென்று, வீடு வீடாக, ஓட்டுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். எந்த வாக்காளரும், 'எங்களை, தி.மு.க.,வினர் சந்திக்கவில்லை' என, சொல்ல முடியாத அளவில், உங்கள் பணி முழுமையாக அமைய வேண்டும்.அதுபோலவே, ஆட்சி யாளர்கள், கடைசி நேரத்தில் செய்ய திட்டமிட்டுள்ள, அதிகார அத்து மீறல்களை கண்டறி வதில், கொக்கு போல, தி.மு.க.,வினர் செயலாற்ற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகம்
கருத்து கணிப்புக்கு தடை ஆணையம் உத்தரவு
சென்னை : 'தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் எதையும் வெளியிடக் கூடாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும், 18ம் தேதி, காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது. மதுரை லோக்சபா தொகுதிக்கு மட்டும், காலை, 7:00 முதல், இரவு, 8:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும். எனவே, இன்று முதல் மே, 19 மாலை, 6:30 மணி வரை, தேர்தல் தொடர்பான, ஓட்டுப்பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
தமிழகம்
பரவும் பழைய பேச்சு பிரேமலதா கோபம்
சமூக வலைதளங்களில், தன் பழைய பேச்சுகள் தொடர்பான, வீடியோக்கள் பரப்பப்படுவதால், பிரேமலதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.உடல்நலம் பாதிக்கப் பட்டதால், பிரசாரத்திற்கு செல்லாமல், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், ஓய்வில் உள்ளார்.இதனால், தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அவரது மனைவி பிரேமலதா, தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.தன் பிரசாரங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளுவதை, அவர் வழக்கமாக வைத்துள்ளார். இது மட்டுமின்றி, விஜயகாந்தை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்.முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களையும் பாராட்டி வருகிறார்.ஆனால், ஜெயலலிதாவின் புகைப்படத்தை, சட்டசபையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, பிரேமலதா முன்பு பேட்டி அளித்திருந்தார்.'ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள், விரைவில் சிறைக்கு செல்வர்' என்றும் ஆவேசமாக, அப்போதைய கூட்டங்களில் முழங்கினார். இது தொடர்பான, வீடியோக்களை, சிலர் வேண்டுமென்றே, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், அ.தி.மு.க., - பா.ம.க.,விற்கு ஆதரவாக, பிரசாரத்திற்கு செல்லும் பிரேமலதாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற பழைய பேச்சுகளை, தி.மு.க.,வினர் திட்டமிட்டு பரப்புவதாக, பிரேமலதா கோபம் அடைந்து உள்ளார்.இதுகுறித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து, வக்கீல்களுடன், அவர் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம்
'தேர்தல் புறக்கணிப்பை சமாளியுங்கள்'
சென்னை : தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மக்களை சமாதானப்படுத்தி, அவர்கள் ஓட்டுப்போட, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாதது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், 100 கிராமங்களை சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர்.சில கிராம மக்கள், தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். சில கிராம மக்கள், மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்துள்ளனர். அந்தக் கிராமங்களின் மக்களை அழைத்து பேசி, சமாதானப்படுத்தி, அவர்கள் தேர்தல் அன்று, ஓட்டுப்பதிவு செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம்
வாக்காளர்களை குற்றம் புரிய துாண்டுகிறார்
சென்னை : 'வாக்காளர்களை குற்றம் புரிய துாண்டும், காங்கிரஸ் வேட்பாளர், இளங்கோவன் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், பாபுமுருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளார்.மனுவில், அவர் கூறியிருப்பதாவது:தேனி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர், இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர், நேற்று முன்தினம், தேனி தொகுதிக்கு உட்பட்ட, சோழவந்தான் பகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, 'நீங்கள், 5,000 ரூபாய் வாங்கி ஓட்டளியுங்கள்' என, தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக, வாக்காளர்களை குற்றம் செய்ய துாண்டும் விதமாக பேசி உள்ளார். இது, அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக, வன்முறையை துாண்டும் விதமாக உள்ளது.எனவே, இளங்கோவன் மீது, தேர்தல் விதி மீறல்; மக்களை லஞ்சம் வாங்க துாண்டுதல்; சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முனைதல் போன்ற பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார். இவர் கொடுத்துள்ள மற்றொரு மனு:தென் சென்னை, தி.மு.க., வேட்பாளர், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக, சைதாப்பேட்டை கிழக்கு பகுதி சார்பில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது, தேர்தல் விதி மீறல்.எனவே, சுவரொட்டி ஒட்டியவர்கள் மீதும், சைதாப்பேட்டை, எம்.எல்.ஏ.,வாக உள்ள, சுப்பிரமணியன், தி.மு.க., வேட்பாளர், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவரொட்டிகளை, மாநகராட்சி ஊழியர்கள் வாயிலாக அகற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம்
வாயை கொடுத்து வம்பு மன்னிப்பு கேட்ட கஸ்துாரி
சென்னை : எம்.ஜி.ஆர்., - லதா குறித்து கருத்து தெரிவித்த, நடிகை கஸ்துாரிக்கு, 'டுவிட்டரில்' கடும் கண்டனங்கள் குவிந்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.பிரிமியர் கிரிக்கெட் போட்டியில், நேற்று முன்தினம், சென்னை சூப்பர் கிங்ஸ் - கோல்கட்டா அணிக்கு இடையே போட்டி நடந்தது. அதில், மிகவும் மெதுவாக ஆடிய, சென்னை அணி குறித்து, நடிகை கஸ்துாரி, 'டுவிட்டரில்' விமர்சனம் செய்திருந்தார். அதாவது, 'என்னய்யா இது... பல்லாண்டு வாழ்க படத்தில், வாத்தியார், லதாவை தடவினதை விட, அதிகமாக தடவுறாங்க' என, கிண்டலாக கூறியிருந்தார். கஸ்துாரியின், இந்த அநாகரிக பேச்சுக்கு, கடும் கண்டனங்கள் குவிந்தன. கஸ்துாரி மீது வழக்கு போடும் அளவுக்கு, சிலர் எச்சரிக்கையும் விடுத்தனர். இதையடுத்து, கஸ்துாரி மன்னிப்பு கேட்டுஉள்ளார். 'டுவிட்டரில்' அவர் கூறியுள்ளதாவது: காதல் காட்சியில், எம்.ஜி.ஆர்., நடித்தபோது, கதாநாயகியின் கன்னத்தையும், கரத்தையும் தடவியதில், என்ன தவறு உள்ளது... அதை மேற்கோள் காட்டுவதில், என்ன தவறு உள்ளது... இருந்தாலும், இதில் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தமிழகம்
தி.மு.க., விளம்பரங்களுக்கு அ.தி.மு.க.,வினர், 'வீடியோ' பதிலடி
தி.மு.க., விளம்பரங்களுக்கு பதிலடியாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு, தி.மு.க.,வினரை கலங்கடித்து வருகின்றனர். தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஏழு நாட்களே உள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், தொகுதி வாரியாக சென்று, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர், சமூக வலைதளங்களில், பிரசாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு அணியினரும், எதிர் அணியினரின் குற்றச்சாட்டுகளுக்கு, 'மீம்ஸ்' மற்றும் வீடியோக்கள் வாயிலாக, பதிலடி கொடுத்து வருகின்றனர்.தி.மு.க., சார்பில், 'ஆதிக்க சக்திகளும் வேண்டாம்; அடிமைகள் ஆட்சியும் வேண்டாம்' என்ற தலைப்பில், ஊடகங்களில் விளம்பரம் கொடுத்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், 'கேமராவிற்கு முன், கேமராவிற்கு பின்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சிக்கும், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.அத்துடன், தி.மு.க., வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விவரிக்கும் வீடியோக்களையும், வெளியிட்டு உள்ளனர். அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலர், ராமச்சந்திரன், 'தி.மு.க., ஆட்சியில் இருந்த போது தான், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது' என்பதை விளக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இது தவிர, ஸ்டாலினின் முரண்பட்ட பேச்சுக்களையும் பரப்பி வருகின்றனர்.அதேபோல, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாநில செயலர், அஸ்பயர் சுவாமிநாதன், 'கயவர் டிவி' என்ற பெயரில், தி.மு.க., விளம்பரங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.அதில், 'சந்தர்ப்பவாத தி.மு.க.,வும் வேண்டாம்; சதிகார காங்கிரசும் வேண்டாம்; வஞ்சக தி.மு.க.,வும் வேண்டாம், வாரி சுருட்டும் காங்கிரசும் வேண்டாம்' என, காங், - தி.மு.க., ஆட்சியில் நடந்த சம்பவங்களை தொகுத்து, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர் வெளியிடும் விளம்பரங்கள், மீம்ஸ்கள், வீடியோக்கள் அனைத்திற்கும், அ.தி.மு.க., தரப்பில், உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது, அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியை, ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம்
மனைவிக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் பாலகிருஷ்ண ரெட்டி
சென்னை : சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழந்தவர், மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. வழக்கின் உத்தரவை, இன்றைக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.ஓசூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக பாலகிருஷ்ண ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் பதவி வகித்தார். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை இழந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஓசூர் தொகுதி, காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஓசூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ௧௮ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.இதில், பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி, ஜோதி, போட்டியிடுகிறார்.ஓசூர் தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிடும் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், 'மனைவிக்கு ஆதரவாக, பாலகிருஷ்ண ரெட்டி, பிரசாரம் செய்கிறார். 'தண்டனை பெற்றவர், தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. அதனால், பிரசாரம்மேற்கொள்ள, பாலகிருஷ்ண ரெட்டிக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடினார். 'மனைவிக்கு ஆதரவாக, கணவன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாதா?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
தமிழகம்
பேனர்/ முதலிடம்!
லோக்சபா தேர்தலை ஒட்டி நடத்தப்படும் வாகன சோதனையில், அதிக அளவில் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில், தமிழகம், முதலிடத்தில் உள்ளது. போதை பொருட்கள் பறிமுதலில், குஜராத் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், நேற்று வரை, 1,000 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி பொருட்கள், 175 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி முடிக்க, ஆணையம், பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், பணம் மற்றும் பொருட்கள், பறிமுதல் செய்யப்படுகின்றன.அதன்படி, நேற்று முன்தினம் வரை, 175 கோடி ரூபாய் ரொக்கம், பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. இதில், வருமான வரித் துறையினர் சோதனையில் சிக்கிய, 49 கோடி ரூபாயும் அடங்கும். இது தவிர, 989.6 கிலோ தங்கம், 492.3 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல்இவற்றின் மொத்த மதிப்பு, 284 கோடி ரூபாய். முதன் முறையாக, தங்கம் பறிமுதல், 1,000 கிலோவை எட்டிஉள்ளது.இது தவிர, வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட, 'லேப்டாப், குக்கர்' மற்றும் வேட்டி, சேலை போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 7.63 கோடி ரூபாய். நேற்று முன்தினம் மட்டும், 177 கிலோ தங்கம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குஜராத் முதலிடம்கடலுாரில், நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 1.27 கோடி ரூபாய்; காஞ்சிபுரத்தில், 24 லட்சம்; விழுப்புரத்தில், 18.7 லட்சம் ரூபாய், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் தான், அதிகபட்சமாக, ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக, ஆந்திராவில், 119 கோடி ரூபாய், பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. குஜராத்தில், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், பறிமுதல் பொருட்களின் மொத்த மதிப்பில், குஜராத் முதலிடத்திலும், தமிழகம், இரண்டாமிடத்திலும் உள்ளன.நடத்தை விதிகள்தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், வரும், 18ல், தேர்தல் நடக்க உள்ளது. அன்று தேர்தல் முடிந்ததும், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காலியாக உள்ள, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. எனவே, தற்போதுள்ள தேர்தல் நடத்தை விதிகள், ஓட்டு எண்ணிக்கை நடக்கும், மே, 23 வரை தொடரும்.ஏப்., 18க்கு பின், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்த அனுமதி அளிப்பது உட்பட, சில விதிகள் தளர்த்தப்பட வாய்ப்புஇருந்தது. தற்போது, இடைத்தேர்தல் நடப்பதால், மாநிலம் முழுவதும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், 'வரும், 18 ஓட்டுப்பதிவிற்கு பின், இடைத்தேர்தல் நடக்கும், நான்கு தொகுதிகளில் மட்டும், வாகன சோதனை தொடரும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழகம்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஓட்டுச்சாவடி மையம்
சென்னை : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், 960 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், குணம் அடைந்து, இயல்பான நிலையில் உள்ள, 114 ஆண்கள், 78 பெண்கள் என, 192 பேர், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், இந்த தேர்தலில், முதல் முறையாக, மனநல காப்பகத்தில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது. இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என்பதை, காப்பகவாசிகளுக்கு, தேர்தல் அலுவலர்கள், நேற்று பயிற்சி அளித்தனர்.இது குறித்து, காப்பக இயக்குனர், பூர்ணா சந்திரிகா கூறியதாவது:மனநல காப்பகத்தில் உள்ள, 192 பேர், மத்திய சென்னை தொகுதிக்கு ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டளிப்பது குறித்த முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழகம்
மனைகள் மறு விற்பனை பதிவுத்துறை அதிரடி
- நமது நிருபர் -அங்கீகாரமில்லாத மனைகளின் மறுவிற்பனையை பதிவு செய்த, சார் பதிவாளர்களின் பதவி உயர்வை நிறுத்தி வைக்க, பதிவுத் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு, விண்ணப்பிக்கும் அவகாசம், 2018 நவம்பர், 3ல் முடிந்தது. அதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நகர், ஊரமைப்புத் துறை வாயிலாக நடந்து வருகிறது. வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்ட போது, 2016 அக்., 20க்கு முன், ஒரு முறையாவது , வீட்டு மனையாக பதிவு செய்த மனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விலக்கு சலுகை நிரந்தரமானதா, குறிப்பிட்ட அவகாசத்துக்கு உட்பட்டதா என்பதை நகர், ஊரமைப்புத் துறையும், பதிவுத்துறையும் தெளிவுபடுத்தவில்லை. இதனால், வரன்முறைக்கு விண்ணப்பிக்காத மனைகளின், மறு விற்பனை தொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் முடிந்த நிலையில், மனைகள் மறுவிற்பனை பத்திரங்களை பதிவு செய்ய கூடாது என, நகர் ஊரமைப்புத் துறை, பதிவுத்துறைக்கு கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில், மனை மறுவிற்பனை பத்திரங்களை பதிவு செய்த சார் பதிவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, பதிவுத் துறை முடிவு செய்துள்ளது.பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நகர், ஊரமைப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்தும், மனைகள் மறுவிற்பனை பத்திரங்களை பதிவு செய்த, சார் பதிவாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மீது, பதவி உயர்வை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் பணிகள் துவங்கி உள்ளன.இவ்வாறு பதிவான பத்திரங்களை என்ன செய்வது என்பது குறித்து, சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.